இறைச்சி உணவு வகைகளுக்கு மாற்றாக பலாப்பழங்களை விரும்பும் வெளிநாட்டவர்

புதுடெல்லி: கொரோனா கிருமித் தாக்கம் காரணமாக உலகளவில் கோழி சம்பந்தமான உணவுப் பொருட்களின் விற்பனை சரிந்துள்ளது. இதையடுத்து அதற்கு மாற்றாக பலாப்பழத்தின் மீது நுகர்வோரின் பார்வை பதிந்துள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விளையும் பலாப்பழங்களுக்கு உலகளவில் தற்போது வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் பலவும் பலாப்பழத்தை அதிகளவு இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. உலகளவில் இந்தியா தான் பலாப்பழங்களை அதிகளவு உற்பத்தி செய்கிறது. ஆண்டுதோறும் பல டன் பலாப்பழங்கள் நுகர்வோர் இன்றி வீணாகின்றன.

பழுப்பதற்கு முன்பு பன்றியைப் போல் தோற்றம் அளிக்கும் பலாப்பழம், கேக், பழரசம், ஐஸ்கிரீம் என பல பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.

மேலும் அவற்றை துண்டாக்கி வறுத்து குழம்புடன் சேர்ப்பது, பீசாக்களின் மேல் தூவும் வறுத்த பருப்புகளுக்கு மாற்றாக பயன்படுத்துவது, பன்றி இறைச்சிக்கு மாற்று உணவாக்குவது என ஐரோப்பிய நாடுகளில் பலாப்பழத்தை பலவிதமாக மக்கள் பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து பலாப்பழத்தை ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கைகள் வருவதாக கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலாப்பழ உற்பத்தியாளர் வர்கீஸ் தரக்கன் தெரிவிக்கிறார்.

அமெரிக்க மக்கள் பலாப்பழத்தை மிகவும் விரும்புவதாக அங்கும் இந்தியாவிலும் உணவகங்களை நடத்தி வரும் அனு பாம்ப்ரி கூறுகிறார்.

“பலாப்பழ கட்லட், பலாப்பழ டாகோஸ் ஆகியவற்றை எங்கள் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்கிறார்கள். அமெரிக்கா முழுவதும் பலாப்பழம் கொண்டு தயாராகும் உணவுப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது,” என்கிறார் அனு பாம்ப்ரி.

ஊரடங்கு காரணமாக கேரளாவில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவிய போது பெரும்பாலானோர் பலாப்பழங்களையும் அவற்றின் கொட்டைகளையும் அதிகளவில் வாங்கியுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த பலாப்பழ உற்பத்தியாளர் ஜேம்ஸ் ஜோசப் கூறுகிறார்.

தாவரங்கள் சார்ந்த உணவுப் பழக்கம் பருவநிலை மாற்றங்களின் போதும் உடல்நலனைக் காக்கும் என்று ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கோழி, பன்றி, மாட்டிறைச்சிகளை சாப்பிடுவோர் அவற்றைப் போன்று தோற்றமளிக்கும் தாவர வகைகளின் மீது பார்வையைத் திருப்பியுள்ளனர்.

இதன் காரணமாகவே பலாப்பழங்களின் விற்பனை உலகளவில் தற்போது சூடுபிடித்துள்ளது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!