100 கி.மீ. வேக காற்றுடன் ஒடிசாவை மிரட்டிய அம்பன் புயல்

கோல்கத்தா: வங்கக் கடலில் உருவாகி உள்ள அம்பன் புயல் நேற்றிரவு கரையைக் கடக்கும் என்றும் அப்போது ஐந்து மீட்டர் உயரத்துக்கு பேரலைகள் எழும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது முதல் இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களிலும் அண்டை நாடான வங்க தேசத்திலும் கனமழை பெய்தது.

மே 21ஆம் தேதி (இன்று) வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து, ஒடிசாவில் 1.3 லட்சம் பேரும் மேற்கு வங்கத்தில் 3 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வங்க தேசத்தில் 20 லட்சம் பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.

ஏற்கெனவே பேரிடர் காலங்களில் அரசுத் தரப்பு பயன்படுத்தும் நிவாரண மையங்கள் அனைத்தும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் இரு மாநில அரசுகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது. மேலும் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பயந்து நிவாரண மையங்களில் தங்க பொதுமக்கள் அஞ்சுகின்றனர். அவர்களை வசிப்பிடங்களில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற வேண்டியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அம்பன் புயல் கரையைக் கடக்கும் போது சுமார் 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் ஐந்து மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் நிலவியது.

நேற்று காலை முதலே ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!