மத்திய அரசு: இந்தியாவில்தான் உயிரிழப்பு குறைவு

புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று பாதிப்பை உரிய நேரத்தில் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால்தான் உலக இறப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“உலக அளவில் கொரோனாவுக்கு சுமார் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இது ஒரு லட்சம் மக்கள்தொகையில் 4.1 என்ற விகிதம் ஆகும். ஆனால், இந்தியாவில் 3 ஆயிரத்து 163 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இது ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு வெறும் 0.2 என்ற விகிதம் ஆகும்.

“அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 26.6 மரணங்களும், இங்கிலாந்தில் 52.1 மரணங்களும், இத்தாலியில் 52.8 மரணங்களும் நிகழ்கின்றன,” என்று மத்திய சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கொரோனா கிருமித்தொற்றை உறுதி செய்ய ஓர் ஆய்வுக்

கூடம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறிய மத்திய அரசு, நாடு முழுவதும் இதுவரை 24 லட்சத்து 25 ஆயிரத்து 742 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

“பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அலுவலகங்களில் ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்துவதற்கும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

“சமூக இடைவெளி இருக்க வேண்டும்,” என்று மத்திய அரசு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!