இந்திய கிருமி ஆபத்தானது: நேப்பாள பிரதமர் சர்ச்சை பேச்சு

காத்மாண்டு: சீனா, இத்தாலியை விட இந்திய கிருமி ஆபத்தானது என்று சர்ச்சையை உருவாக்கும் விதமாக பேசியுள்ளார் இந்தியாவின் அண்டை நாடான நேப்பாளத்தின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி.

நேப்பாளத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஒலி, “இந்தியாவிலிருந்து சட்டவிரோத வழிகளில் நேப்பாளத்துக்குள் வருபவர்கள் கொரோனாவைப் பரப்புகின்றனர். இதற்கு உள்ளூர் பிரதிநிதிகளும் கட்சித் தலைவர்களுமே காரணம். முறையான பரிசோதனை ஏதும் மேற்கொள்ளாமல் இந்தியாவிலிருந்து சிலர் வருவதால்தான் இந்த பிரச்சினை.

“இந்தியா வழியாக பரவும் கிருமி, சீனா மற்றும் இத்தாலிய கிருமியைவிட அபாயகரமாக உள்ளது. இந்திய கிருமியால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்,” என்றது இந்தியத் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்

படுத்தியுள்ளது.

இதே உரையின்போது காலாபானி-லிம்பியாதுரா, லிபுலேக் பகுதிகளை நேப்பாளத்தோடு இணைப்போம் என்றும் ஒலி சொன்னார். அண்மையில் இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய சில பகுதிகளைச் சேர்த்து நேப்பாளம் புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!