இந்தியா: எல்லையில் அமைதி பேணுவது மிக அவசியம்

புது­டெல்லி: இந்­திய-சீன எல்­லைப் பகு­தி­யில் அமைதி ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக இரு நாடு­களும் தங்­கள் தூத­ர­கங்­கள், வெளி­யு­றவு அமைச்­ச­கங்­கள் மற்­றும் ராணுவ மட்­டத்­தில் தொடர்ந்து தொடர்­பில் இருந்து வரு­வ­தாக மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை செய்­தித் தொடர்­பா­ளர் அனு­ராக் ஸ்ரீவத்­சவா தெரி­வித்­துள்­ளார்.

இணை­யம் வழி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் உரை­யா­டிய அவர், எல்லை நிர்­வா­கத்­தின் கீழ் மேற்­கொள்­ளும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் சீனா தனது எல்­லைக்­குள் வைத்­துக்­கொள்ள வேண்­டும் எனக் குறிப்­பிட்­டார்.

இது தொடர்­பாக சீனா­வுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

இவ்­வி­ஷ­யத்­தில் இந்­தியா மிகத் தெளி­வாக இருக்­கிறது என்­றும் சீனா­வும் இதே­போல் செயல்­பட வேண்­டும் என இந்­திய அரசு எதிர்­பார்க்­கிறது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

எல்­லை­யில் அமை­தி­யை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் பேணுவதன் அவ­சி­யம் என்று குறிப்­பிட்ட அனு­ராக் ஸ்ரீவத்­சவா, கருத்து வேறு­பா­டு­களை பேச்­சு­வார்த்­தை­கள் மூலம் களைய முடி­யும் என இந்­தியா உறு­தி­யாக நம்­பு­கிறது என்­றும் கூறி­னார்.

“அதே­நே­ரம் இந்­தி­யப் பிர­த­மர் கூறி­யது போல இந்­தி­யா­வின் இறை­யாண்மை மற்­றும் வட்­டார ஒரு­மைப்­பாட்டை உறு­தி­செய்­வ­தில் நாங்­கள் மிகுந்த முனைப்புடன் இருக்­கி­றோம்,” என்­றார் அனு­ராக் ஸ்ரீவத்­சவா.

கல்­வான் பள்­ளத்­தாக்கு மோத­லின்­போது இந்­திய வீரர்­கள் சிலர் மாய­மாகி விட்­ட­தாக ஊட­கங்­களில் வெளி­யான செய்­தி­கள் உண்­மை­யல்ல என்­றும் அவர் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே எல்­லை­யில் நடந்த மோத­லில் காயம் அடைந்த 76 ராணுவ வீரர்­கள் குண­ம­டைந்து வரு­கின்­ற­னர் என்­றும் அவர்­கள் விரை­வில் பணிக்கு திரும்­பு­வார்­கள் என்­றும் ராணு­வத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காய­ம­டைந்த வீரர்­களில் 18 பேர் லேவில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், எல்லை மோத­லின்­போது இந்­திய வீரர்­கள் ஆயு­த­மின்றி சீன ராணு­வத்­தி­னரை எதிர்­கொண்­ட­தா­க­வும் வீரர்­கள் பலி­யாக யார் கார­ணம்? என்­றும் காங்­கி­ரஸ் எம்பி ராகுல்­காந்தி டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

இதற்­குப் பதி­ல­ளித்­துள்ள வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் ஜெய்­சங்­கர், எல்லைப் பாது­காப்பு பணி­யில் இருக்­கும்­போது வீரர்­கள் கையில் நிச்­ச­யம் ஆயு­தம் இருக்­கும் என தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

“இந்­திய வீரர்­க­ளி­டம் ஆயு­தங்­கள் இருந்­தன. எனி­னும் 1996, 2005 ஒப்­பந்­தங்­க­ளின்­படி மோதல் சம­யங்­களில் ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை என்ற விதி­முறை இருப்­ப­தால் ஆயு­தங்­களை பயன்­படுத்த வில்லை,” என ஜெய்­சங்­கர் மேலும் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!