கட்டுப்பாடுகள், தளர்வுகளை அறிவித்த புதுவை முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரியில் தமி ழகத்தின் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில் மீண்டும் கட்டுப்பாடுகளையும் தளர்வுகளையும் அறிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி உள்ளது.

இன்று முதல் அனைத்து கடைகளும் காலை 6 முதல் பகல் 2 மணிவரை மட்டுமே திறந்து இருக்கும்.

புதுச்சேரி கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும். தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்படலாம். முகக் கவசமின்றி வெளியே நடமாடினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

விவசாயப் பணிகள், அத்தி யாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செயல் படுவதில் எந்தத் தடையுமில்லை.

உணவகங்களில் மதியம் 2 மணிவரை சாப்பிடவும் இரவு 9 மணி வரை உணவைப் பொட்ட லங்களில் வாங்கிச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 286 பேர் கொவிட் 19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் பலியாகி உள்ளனர். தொற்றின் பாதிப்பில் இருந்து 118 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!