பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து குதிரையில் எம்எல்ஏ நூதனப் போராட்டம்

ஊட்டி: நீல­கிரி மாவட்ட காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் ஊட்டி, கூட­லூர் ஆகிய இரண்டு இடங்­க­ளி­லும் பெட்­ரோல், டீசல் விலை உயர்­வைக் கண்­டித்து ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

இந்த ஆர்ப்­பாட்­டத்­திற்கு தலைமை தாங்­கிய மாவட்­டத் தலை­வர் கணேஷ் எம்­எல்ஏ, குதிரை மீது சவாரி செய்­த­படி நூத­னப் போராட்­டத்­தில் பங்­கேற்­றார்.

“நாளுக்கு நாள் பெட்­ரோல், டீசல் விலை உயர்ந்து வரு­வ­தால் மக்­கள் பழங்­கா­லத்­தில் இருந்ததைப் போல் குதி­ரை­கள் மீதும் சைக்­கிள்­க­ளி­லும்­தான் செல்ல நேரி­டும்,” என்று கணேஷ் எம்­எல்ஏ கூறி­னார்.

பின்­னர் அவர் பெட்­ரோல், டீசல் விலை உயர்­வைக் கட்­டுப் படுத்­தக் கோரி ஊட்டி காந்­தல் முக்­கோ­ணத்­தில் இருந்து படகு இல்­லம் வரை சாலை­யில் குதிரை மீது அமர்ந்து சென்று நூதனப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்.

இவருடன் இதர கட்சி நிர்­வா­கி­களும் குதி­ரை­களில் சென்­ற­னர்.

“நாளுக்கு நாள் பெட்­ரோல், டீசல் விலை உயர்ந்து வரு­வ­தால் மக்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். ஊர­டங்கு காலத்­தில் இது­போன்ற விலை உயர்வு மக்­களை மேலும் சிர­மத்­திற்கு உள்­ளாக்­கும். எனவே விலை உயர்­வைக் கட்­டுப்­ப­டுத்த மத்­திய, மாநில அர­சு­கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்,” என்று முழங்கினர்.

இதே­போன்று பெட்­ரோல், டீசல் விலை உயர்­வைக் கண்­டித்து கூட­லூர் புதிய பேருந்து நிலை­யம் முன்­பும் பந்­த­லூ­ரி­லும் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

தொடர்ந்து மத்­திய, மாநில அர­சு­க­ளைக் கண்­டித்­தும் இவர்­கள் கோஷங்­களை எழுப்­பி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!