இந்தியாவில் 6 லட்சம், தமிழகத்தில் ஒரு லட்சம் கடந்த கிருமி பாதிப்பு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் அசுர வேகத்தில் அதிகரித்து வரும் கொவிட்-19 கிருமித் தொற்றால் 6 லட்­சத்­துக்­கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்­யப்­பட்­டுள்ளது.

எனினும் இத்தொற்றின் பாதிப்பில் இருந்து 3.59 லட்­சம் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நேற்று மத்­திய சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்டுள்ள தக­வ­லின்­படி, “இந்­தி­யா­வில் இது­வரை 6,04,641 பேர் கிருமித் தொற் றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கையும் 17,834 ஆக உயர்ந்­துள்­ளது.

இது­வரை 3,59,860 பேர் கொவிட்-19 கிருமி பாதிப்­பில் இருந்து குண­ம­டைந்­துள்­ள­னர். நேற்று மட்­டும் 11,881 பேர் குண மடைந்­துள்­ள­னர். நாடு முழு­வதும் உள்ள பல்­வேறு மருத்­து­வ­ம­னை­களில் 2,26,947 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 1,80,298 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தில் 94,049 பேருக்­கும் டெல்­லி­யில் 89,802 பேருக்­கும் தொற்று பரவியிருப்பது உறுதியாகி உள்­ளது.

கொரோனா பாதிப்பு தமிழ்­நாட்­டில் கடந்த சில நாட்­க­ளாகவே ஒரே நாளில் சுமார் 4,000 பேர் வரை அதிகரித்துள்ளது.

கிருமியால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்­சத்தை நெருங்க உள்­ளது. இதன்மூலம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை தமி­ழ­கத்­தில் 94,049ஆக அதி­க­ரித்­துள்­ளது. சென்­னை­யில் மொத்த பாதிப்பு 60,533ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதன்மூலம் உயி­ரி­ழப்பு தமி­ழ­கத்­தில் 1,264 ஆக உயர்ந்­துள்­ளது. இது­வரை குண­ம­டைந்­த­வர்­கள் எண்­ணிக்கை 52,926 ஆக உயர்ந்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!