திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொவிட்-19

உலக அளவில் பிரபலமான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா கிருமி பரவல் காரணமாக 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, ஜூன் 8 முதல் கோயில் திறக்கப்பட்டது.

பின்னர் ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால் திருப்பதி கோயில் மூடப்படுமா என்பது பற்றிய தகவல் இல்லை.