இந்தியாவில் ஜூலை 31 வரை அனைத்துலக விமான சேவைக்குத் தடை

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒரே நாளில் சுமார் 20,000 பேர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விமானங்கள் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அனைத்துலக அளவிலான விமான சேவைகளுக்கு இம்மாதம் இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு விமானச் சேவைக்கும், சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமான சேவைக்கும் பொருந்தாது.

முன்பு அனைத்துலக விமான சேவைகள் ஜூலை 15 வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!