தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவம்: சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை ‘முறையான விசாரணை வேண்டும்’

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இரு வரும் சிறைக்காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிபிஐ அதி காரிகளின் இரண்டாம் நாள் விசாரணை நேற்று சூடுபிடிக்கத் தொடங்கியது.

முதல் கட்டமாக, சிறைச்சாலை யில் உள்ள சாத்தான்குளம் ஆய் வாளர் உள்பட ஐவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் இரண்டாம் கட்டமாக, தடயங்களை அழித்ததாகக் கூறப்படும் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட ஐவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அத்துடன், ெபன்னிக்​சி​ன் நண்பர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளனர்.

இவ்வழக்கின் தொடர்பில் சிபிசிஐடி அதிகாரிகள் அளித்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி கிளைச் சிறை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களி லும் விசாரணை நடத்தினர்.

இரு குழுவாகப் பிரிந்து விசார ணையைத் தொடங்கி உள்ளனர் சிபிஐ அதிகாரிகள். முதல் நாள் விசாரணையின்போது ஜெயராஜ் வீட்டுக்குச் சென்ற ஒரு குழுவினர், ஜெயராஜின் மனைவி, மகள்கள், நெருங்கிய உறவினர்களிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மற்றொரு குழுவினர் சாத்தான் குளம் அரசு மருத்துவமனையில் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது, பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு வர வழைத்து சம்பவத்தன்று நடந்த காட்சிகளைச் சொல்ல வைத்து காெணாளியாகப் பதிவு செய்தனர்.

மருத்துவமனையில் 7 மணி நேரம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான தாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த தகவல்கள் என்ன என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

சாத்தான்குளம் சம்பவம் தொடர் பான விசாரணையில் கைப்பற்றப் பட்ட காெணாளி உள்ளிட்ட ஆதா ரங்கள் மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கப்பட்ட நிலையில், அவற்றின் விவரங்கள் சில கசிந்துள்ளன.

ஜெயராஜ், பென்னிக்ஸ் அணிந்திருந்த மூன்று கைலிகள், ஏழு உள்ளாடைகள், ஒரு பிவிசி பைப், ஒரு லத்தி, பிஸ்கட், ெராட்டிப் பை ஒன்று என சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமிதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய ஐவரையும் பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட போலிஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன், காவல் துறையினரின் மனிதாபிமானமற்ற தாக்கு தலால் உயிரிழந்த சம்பவம் குறித்து முறை யாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் (படம்) வலியுறுத்தி உள்ளார்.

உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், அமெரிக்கா வில் நடைபெற்ற கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலையுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஃபானே டுஜாரிக், “இதுபோன்ற மரணங்களை முழு விசாரணைக்கு உட்படுத்தவேண்டியது,” அவசியம் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!