‘நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வலை தடுக்க பொது இடங்­களில் தனிப்­பட்ட சுகா­தா­ரத்­தை­யும் சமூக ஒழுக்­கத்­தை­யும் கடைப்­பி­டிக்க வேண்­டும் என பிர­த­மர் மோடி (படம்) மீண்­டும் வலி­யு­றுத்தி உள்­ளார்.

தலை­ந­கர் டெல்­லி­யில் கொரோனா கிருமித் தொற்­றுப் பர­வல் நன்­றா­கக் கட்­டுப்­ப­டுத்­தப் பட்­டுள்­ள­தாக அவர் பாராட்­டி­யுள்­ளார்.

நாட்­டின் பிற மாநி­லங்­களும் டெல்­லி­யில் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும் என பிர­த­மர் கேட்­டுக்­கொண்­டார்.

தனிப்­பட்ட சுகா­தா­ரம் பேணப்­பட வேண்­டி­ய­தின் அவ­சி­யம் குறித்து பொது­மக்­க­ளி­டம் வலி­யு­றுத்த வேண்­டும் என்­றும் கிரு­மித்­தொற்று பர­வல் குறித்த விழிப்­பு­ணர்வை அனைத்து பகு­தி­க­ளி­லும் பரப்ப வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

நாடு முழு­வ­தும் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள், மாநி­லங்­க­ளின் தயார் நிலை குறித்து பிர­த­மர் மோடி டெல்­லி­யில் ஆலோ­சனை மேற்­கொண்­டார்.

இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அப்போது, டெல்லியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார்.

டெல்லியில் மத்திய, மாநில அரசுகள் தொற்றை கட்டுப்படுத்த பின்பற்றிய அணுகுமுறையை மற்ற மாநில அரசுகளும் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

“குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத்­தில் கொவிட்-19 சிகிச்­சைக்கு மருத்­து­வ­ம­னை­கள் முக்­கி­யத்­து­வம் அளித்து வரு­கின்­றன. எனவே, பிற பொது­வான நோயா­ளி­களை அவர்­க­ளின் வீடு தேடிச் சென்று, மருத்­துவ வாக­னத்­தில் இருந்­த­ப­டியே மருத்­து­வர்­கள் சிகிச்சை அளிக்­கும் ‘தன்­வந்­திரி ரத’ திட்­டம் சிறப்­பா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதை பிற மாநி­லங்­களும் பின்­பற்­ற­லாம்,” என பிர­த­மர் மோடி மேலும் தெரி­வித்­தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நாடு முழுவ தும் புதிதாக 28,637 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 8.5 லட்சமாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 நோய்ப்பிடியில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 5.34 லட்சம் என்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,674 என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்­கப்­பூர் பிர­த­ம­ருக்கு மோடி வாழ்த்து

சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் வெற்றி பெற்­றுள்ள பிர­த­மர் லீ சியன் லூங்­கிற்கு இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி வாழ்த்­துத் தெரி­வித்­துள்­ளார்.

மீண்­டும் வெற்றி பெற்­ற­தற்கு தமது பாராட்­டு­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­வ­தாக மோடி வாழ்த்­துச் செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளார். மேலும் சிங்­கப்­பூர் மக்­கள் அமை­தி­யான, வள­மான எதிர்­கா­லத்­தைப் பெறு­வ­தற்கு வாழ்த்­து­கள் என்­றும் பிர­த­மர் மோடி கூறி­யுள்­ளார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!