தூதரகம் பெயரில் தங்கம் கடத்தல்: கேரள பெண் அதிகாரி கைது

திரு­வ­னந்­த­புரம்: தங்­கக் கடத்­தல் தொடர்­பாக தேடப்­பட்டு வந்த கேரள அரசு அதி­காரி சுவப்னா (படம்) பெங்­க­ளூ­ரு­வில் வைத்து தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அவ­ரு­டன் மேலும் இரு­வர் பிடி­பட்­டுள்­ள­னர். சந்­தீப் என்பவரின் உத­வி­யு­டன் சுவப்னா தமது குடும்­பத்­து­டன் நாகா­லாந்து தப்­பிச்­செல்ல திட்­ட­மிட்டு இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள ஐக்­கிய அரபு சிற்றரசின் தூத­ர­கத்­தின் பெய­ரில் வெளி­நா­டு­களில் இருந்து தங்­கம் கடத்தி வரப்­ப­டு­வ­தாக சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு தக­வல் கிடைத்­தது. இதை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­யின்­போது 30 கிலோ தங்­கம் பறி­மு­தல் ஆனது. விசா­ர­ணை­யில் கேரள அர­சுத் துறை அதி­கா­ரி­யான சுவப்­னா­வுக்கு இக்­க­டத்­த­லில் தொடர்­ பிருப்பது தெரி­ய­வந்­தது.

இவர் கேரள முதல்­வர் பின­ராயி விஜ­ய­னுக்கு நெருக்­க­மா­ன­வர் என்று கூறப்­பட்ட நிலை­யில் திடீ­ரென தலை­ம­றை­வா­னார் சுவப்னா.

இந்த வழக்­கின் விசா­ர­ணையை தேசிய புல­னாய்வு முகமை தன் பொறுப்­பில் எடுத்­துக் கொண்­ட­இதை­ய­டுத்து சுவப்­னா­வுக்கு வலை­வீ­சப்­பட்­டது. அவர் தமி­ழ­கத்­திற்கு தப்­பிச் சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் பெங்­க­ளூ­ரு­வில் வைத்து அவரை அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர். அவ­ரு­டன் இருந்த சந்­தீப் என்­ப­வ­ரும் தனது நண்­பர் ஒரு­வ­ரு­டன் கைதா­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!