அசாம் மாநிலத்தில் மட்டும் 24 லட்சம் மக்கள் பாதிப்பு; 87 பேர் உயிரிழப்பு வெள்ளத்தில் மிதக்கும் 9 மாநிலங்கள்

கௌகாத்தி: ஒரு­பு­றம் ஆயி­ரக்­கணக்­கான மக்­க­ளின் உயி­ரைப் பறித்து வருகிறது கொவிட்-19 கிரு­மித்தொற்று. மற்­றொரு புறம், நாட்­டில் உள்ள அசாம், பீகார், குஜ­ராத் உள்­ளிட்ட ஒன்­பது மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் வெள்­ளப் பேர­ழி­வால் திணறி வரு­கின்­ற­னர்.

இந்த ஒன்­பது மாநி­லங்­க­ளி­லும் அசாம் மாநி­ல மக்களே, பரு­வ ­ம­ழை­யால் ஏற்­பட்ட வெள்ளப் பாதிப்பு, நிலச்­ச­ரிவால் மிக மோச மாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலப் பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் வெளியிட்டுள்ள தினசரி வெள்ள பாதிப்புத் தகவலின்படி, “அசாம் மாநி­லத்­தின் 24 மாவட்­டங்களைச் சேர்ந்த 24.19 லட்­சம் மக்­கள் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். வெள்­ளம், நிலச்­ச­ரிவின் காரணமாக இது­வரை 87 பேர் உயி­ரி­ழந்துள்­ளனர்,” எனத் தெரி­விக்கப்பட்டு உள்ளது.

24 மாவட்­டங்­களில் உள்ள 2,323 கிரா­மங்­கள் நீரில் மிதப்­ப­தா­க­வும் 1.10 லட்சம் ஏக்­கர் விளை­நி­லங்­கள் நீரில் மூழ்­கி­யுள்­ள­தா­க­வும் அசா­மில் தற்­போது 1,45,648 பேர் நிவா­ரண முகாம்­களில் தங்கி உள்­ள­தாகவும் மத்­திய அரசு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

“அசாம் மட்­டு­மல்ல. பீகார், உத்­த­ரப் ­பி­ர­தே­சம், மேற்கு வங்­கம், குஜ­ராத், மத்­தி­யப் பிர­தே­சம், உத்­த­ர­காண்ட், கேரளா, மகா­ராஷ்­டிரா ஆகிய மாநி­லங்­களும் கடு­மை­யான வெள்ளப் பேரழிவை எதிர்கொண்டு வரு­கின்­றன,” என்று டெல்லி உள்­துறை அமைச்சகத்­தின் பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் குறிப்பிட்டுள்ளது.

இதர மாநிலங்களிலும் வெள்ள பாதிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது.

பீகா­ரில் சுபால், கிஷன்­கஞ்ச், தர்­பங்கா, முசா­பர்­பூர், கோபால்­கஞ்ச் உள்­ளிட்ட எட்டு மாவட்­டங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மாநி­லத்­தில் மொத்­தம் 147 கிரா­மங்­களும் 2,64,000 மக்­களும் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கேர­ளா­வில் திரு­வ­னந்­த­பு­ரம், கொல்­லம், ஆலப்­புழா, திருச்­சூர், பாலக்­காடு, கோழிக்­கோடு, மலப்­பு­ரம், எர்­ணா­கு­ளம், இடுக்கி உள்­ளிட்ட 13 மாவட்­டங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

அதே­போல், குஜ­ராத்­தில் தேவ்­பூமி துவா­ரகா, ஜாம்­ந­கர், ராஜ்­கோட், போர்­பந்­தர் ஆகிய மாவட்­டங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளதுடன், ெவள்­ளத்­தால் 81 பேர் உயிரிழந்த­னர்.

மத்­தி­யப் ­பி­ர­தே­சத்­தில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்பட்­டுள்­ள 27 மாவட்டங்­களில், 43 பேர் இறந்­த­னர். உத்­த­ரப் ­பி­ர­தே­சத்­தில் 6 மாவட்­டங்­களும் மேற்கு வங்­கத்­தில் 23 மாவட்­டங்களும் பாதிக்­கப்­பட்டு உள்­ள­ன. இங்கு வெள்­ளத்தால் 142 பேர் உயிரிழந்தனர்.

பீகா­ரில் இடி­யு­டன் கூடிய மழை­யால் 17 பேர் கொல்­லப்­பட்­ட­னர். இடி மின்­னல் கார­ண­மாக இறந்­த­வர்­க­ளுக்கு முதல்­வர் நிதிஷ்­கு­மார் இரங்­கல் தெரி­வித்­துள்­ளார். பேர­ழி­வின் இந்த நேரத்­தில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளு­டன் தான் இருப்­ப­தாக முதல்­வர் கூறி­யுள்ளார்.

இதற்­கிை­டயே, ஐக்­கிய நாடு­கள் சபை­ பொதுச்­செ­ய­லா­ளரின் செய்­தித் தொடர்­பா­ளர் ஸ்டீ­பன் துஜா­ரிக் கூறு­கை­யில், “2,300 கிரா­மங்­களில் ஏராளமான மக்­கள் வீடற்­ற­வர்­க­ளா­கி உள்ளனர். தேவைப்­பட்­டால் இந்­திய அர­சாங்­கத்­திற்கு உதவ ஐக்­கிய நாடு­கள் சபை தயா­ராக உள்­ளது,” என்று கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!