இந்தியாவில் சோதிக்கப்படவுள்ள இங்கிலாந்தின் கொரோனா தடுப்பூசி

புது­டெல்லி: இங்­கி­லாந்­தில் தயா­ரிக்­கப்­பட்ட தடுப்­பூ­சியை இந்­தி­யா­வில் பரி­சோ­திக்க இந்­திய மருந்து கட்­டுப்­பாட்டு அமைப்­பி­டம் அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது.

உல­க­ள­வில் கொரோனா கிரு­மித்­தொற்று ஒவ்­வொரு நாளும் புதிய உச்­சம் தொட்டு வரும் நிலை­யில், தடுப்­பூ­சிக்­கான எதிர்­பார்ப்பு பெருகி வரு­கிறது.

இந்­நி­லை­யில் இங்­கி­லாந்­தின் ஆக்ஸ்­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஜென்­னர் இன்ஸ்­டி­டி­யூட், மருந்து நிறு­வ­ன­மான அஸ்ட்ரா ஜெனே­கா­வு­டன் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள கொரோனா தடுப்­பூசி மிகுந்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்த தடுப்­பூ­சியை இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்து விற்­பனை செய்­வ­தற்கு புனே­வைச் சேர்ந்த இந்­திய செரம் இன்ஸ்­டி­டி­யூட் என்ற மருந்து நிறு­வ­னம் ஒப்­பந்­தம் செய்து கொண்­டுள்­ளது.

இங்­கி­லாந்­தில் முதல்­கட்ட பரி­சோ­தனை வெற்றிகர­மாக முடி­வ­டைந்த நிலை­யில், இந்த தடுப்­பூ­சி­யின் 2வது, 3வது கட்ட மருத்­துவ பரி­சோ­த­னையை வரும் ஆகஸ்ட் மாதத்­தில் இந்­தி­யா­வில் சுமார் 1,600 பேரிடம் மேற்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்கை முடுக்கி விடப்­பட்­டுள்­ளது.

‘கொவிட் ஷீல்டு’ என்று இந்­தி­யா­வில் பெய­ரி­டப்­பட்­டுள்ள, இச்­சோ­த­னையில் தடுப்­பூ­சி­யின் பாது­காப்பு மற்­றும் நோய் எதிர்ப்புச்

­சக்­தியைத் தீர்­மா­னிக்க அனு­மதி வழங்­கு­மாறு கேட்டு இந்­திய தலைமை மருந்து கட்­டுப்­பாட்டு அமைப்­பி­டம் (டிசி­ஜிஐ) இந்த நிறு­வ­னம் விண்­ணப்­பித்து உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!