மாப்பிள்ளை, மணப்பெண் உள்ளிட்ட 43 பேருக்கு தொற்று

காசர்­கோடு: கேர­ளா­வின் காசர்­கோடு மாவட்­டம் செங்­கலா கிரா­மப் பஞ்­சா­யத்­துக்கு உட்­பட்ட பகு­தி­யில் இம்­மா­தம் 17ஆம் தேதி திரு­ம­ணம் ஒன்று நடந்­தது.

கொரோனா கிரு­மிப் பர­வல் தடுப்பு நடை­மு­றை­கள் நடப்­பில் இருப்­ப­தால் திரு­ம­ணம் உள்­ளிட்ட சமூக பங்­கேற்­பு­களில் 50 பேருக்கு மேல் பங்­கேற்­கக்­கூ­டாது என்ற விதி­முறை கேரள மாநி­லம் முழு­வ­தும் கடைப்­பி­டிக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. இருப்­பி­னும் விதி­மு­றையை மீறி இந்­தத் திரு­ம­ணத்­தில் 100க்கும் மேற்­பட்­டோர் பங்­கேற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், திரு­ம­ணத்­தில் பங்­கேற்­ற­வர்­கள் அடுத்­த­டுத்து கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து திரு­ம­ணத்­தில் கலந்­து­கொண்ட அனை­வ­ரின் விவ­ரங்­க­ளைத் திரட்­டிய மருத்­துவ அதி­கா­ரி­கள் ஒவ்­வொ­ரு­வ­ரா­கத் தேடிச் சென்று அவர்­க­ளின் உடல்­நி­லை­யைப் பரி­சோ­தித்­த­னர்.

இதில் மண­ம­கன், மண­ம­கள், மண­ம­க­னின் தந்தை உள்­பட்ட 43 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இந்­நி­லை­யில், காசர்­கோடு மாவட்ட ஆட்­சி­யர் டி சஜித் பாபு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், “இந்­தத் திரு­ம­ணத்­தில் பங்­கேற்ற 128 பேரைக் கண்­டு­பி­டித்து அவர்­க­ளின் ரத்த மாதி­ரி­க­ளைப் பரி­சோ­தனை நடத்­தி­னோம். அதில் 43 பேருக்­குக் கொரோனா தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

“தொற்­று­நோய் தடுப்­புச் சட்­டத்தை மீறி அதி்க­மா­னோ­ரைப் பங்­கேற்க வைத்த திரு­மண வீட்­டார் மீது வழக்­குப் பதிவு செய்ய உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அவர்­கள் மீதான குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஈராண்டு சிறை மற்­றும் ரூ.10 ஆயி­ரம் அப­ரா­தம் விதிக்­கப்­படும்,” என்று தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!