சுடச் சுடச் செய்திகள்

மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் வெளியிட விரும்பும் இங்கிலாந்து

கத்தியின்றி, ரத்தமின்றி அகிம்சை வழியில் போராடி இந்தியாவின் சுதந்திரப் போராட்ட நாயகனாகத் திகழ்ந்த மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கும் ஆசியா மற்றும் மற்ற சிறுபான்மை இன சமூகங்களுக்கும் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவை அது எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருகிறது என்று  பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ரிஷி சுனக் கூறினார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் எனும் ஊரில் 1869ஆம் ஆண்டில், அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார் மகாத்மா காந்தி. அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அனைத்துலக வன்முறையற்ற தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon