இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொவிட்-19; மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதித்துக் கொள்ளுமாறு தமது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.50 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 37,364 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை கொரோனா தொற்றால் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான கமல் ராணி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.