போதைக்கு கிருமிநாசினி; 36 பேர் பலி: விசாரணைக்கு உத்தரவு

அம­ரா­வதி: ஆந்­தி­ரா­வில் மது கிடைக்­கா­த­தால் கிரு­மி­நா­சினி அருந்தி பலி­யா­னோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. நேற்று மாலை நில­வ­ரப்­படி 36 பேர் பலி­யாகி இருப்­ப­தாக அம்­மா­நில அரசு தெரி­வித்­துள்­ளது.

ஊர­டங்கு கார­ண­மாக ஆந்தி­ரா­வின் பல்­வேறு பகு­தி­களில் மதுக் ­கடை­கள் மூடப்­பட்­டுள்­ளன. இதனால் மதுப்­பி­ரி­யர்­கள் தவிப்புக்கு ஆளா­கி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் கிரு­மி­நா­சி­னியை வெறும் வயிற்­றில் குடித்­தால் மது­வுக்கு இணை­யான போதை கிடைக்­கும் என்று பர­விய தக­வலை நம்பி, மது அருந்­தும் பலர் உள்­ளூர் கடை­களில் விற்­ப­னைக்கு இருந்த கிரு­மி­நா­சினி திர­வத்தை வாங்கி குடித்­துள்­ள­னர்.

இத­னால் பல­ரும் வயிற்று வலி, கடும் எரிச்­சல் உள்­ளிட்ட உடல் உபா­தை­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

பிர­கா­சம், மேற்கு கோதா­வரி, விசா­கப்­பட்­டி­னம், குண்­டூர் ஆகிய நான்கு மாவட்­டங்­களில் இவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மருத்­து­வ­ மனை­களில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். எனி­னும் சிகிச்சை பல­னின்றி இது­வரை 36 பேர் பலி­யாகி உள்­ள­னர்.

கிருமிநாசினியுடன் வேறு சில பொருட்களையும் கலந்து பருகும் போது போதை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்றும் பலரது மரணம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து அம்மாநில அரசு யோசித்து வருகிறது.

எனவே மது­வுக்கு மாற்­றாக கையைச் சுத்­தப்­ப­டுத்­தும் கிருமி­ நாசி­னியை வாங்­கிப் பரு­கும் பழக்­கம் மதுப்­பி­ரி­யர்­கள் மத்­தி­யில் முன்பே தொடங்­கி­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நிடா­ம­னரு கிரா­மத்­தில் மருந்துக்­கடை நடத்தி வரும் ராம­கிருஷ்ணா, தனது கடைக்கு வரும் சில வாடிக்கை­யா­ளர்­கள் தின­மும் ஒரு புட்டி கிரு­மி­நா­சினி வாங்­கிச் செல்­வது வழக்­கம் என்­கி­றார்.

“கைக­ளைச் சுத்­தப்­ப­டுத்த மட்டுமே கிரு­மி­நா­சினி என்­றால், ஒரு மாதத்­துக்கு ஒரு புட்­டியே போது­மா­னது. மேலும் சிலர் மொத்­த­மாக பல புட்­டி­கள் வாங்­கிச் செல்­வ­தும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது,” என்­கி­றார் ராம­கி­ருஷ்ணா.

இதை­ய­டுத்து விரி­வான விசா­ரணை நடத்­தும்­படி அதி­கா­ரி­களுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார் ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி.

இதற்கிடையே பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆந்திர ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!