400 கிலோ தங்கம்: அதிகாரிகள் தொடர்பு பற்றியும் புலன் விசாரணை

சென்னை: கேரள மாநி­லத்­தில் உள்ள ஐக்கிய அரபு சிற்­ற­ரசு தூத­ர­கத்­துக்கு உண­வுப் பொருள் என்ற பெய­ரில் தங்­கம் கடத்தி வரப்­பட்ட சம்­ப­வத்­தில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு தொடர்பு இருக்­க­லாம் என்ற சந்­தேகம் கிளம்பி இருக்­கிறது.

இந்த நிலை­யில், தமிழ்­நாட்­டில் உள்ள விமான நிலை­யங்­கள் வழியாக கடந்த சில மாதங்­களில் 400 கிலோ தங்­கக் கடத்­தல் முயற்சி நடந்து இருப்­ப­தால் அதி­கா­ரி­கள் தமி­ழ­கத்­தில் பல பகு­தி­களி­லும் முகா­மிட்டு தீவிர விசாரணை நடத்தி வரு­கி­றார்­கள்.

தேசிய வேவுத்­துறை அதி­கா­ரி­கள் குழு ஒன்று சென்னை வந்து விமான நிலைய அதி­கா­ரி­கள் உட்பட பல­ரி­டத்­தி­லும் புலன் வி­சா­ரணை நடத்­தி­யது.

கேர­ளா­வில் இருந்து வந்த அந்தக் குழு, பல விவ­ரங்­க­ளு­டன் திரும்­பிச் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. தங்­கக் கடத்­தல் சம்­ப­வங்­களில் விமான நிலை­யம் மற்­றும் சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளுக்­கும் தொடர்பு இருக்­கும் என்­ப­தால் சந்­தே­கத்­திற்­கு­ரிய அதி­கா­ரி­களும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள் என்றும் தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலை­யங்­கள் வழி­யாக நடந்த தங்­கக் கடத்­தல் விவ­கா­ரங்­கள் தொடர்­பான பத்­தி­ரங்­களை ஒரு குழு­வி­னர் சென்­னை­யி­லேயே தங்கி திரட்டி வரு­வ­தா­க­வும் அந்த வட்­டா­ரங்­கள் மேலும் தெரி­வித்­துள்­ளன.

சூளை­மேட்­டில் கடந்த 2019 ஜன­வரி மாதம் 20 கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்ட விவ­கா­ரம், 24 கிலோ தங்­கத்­து­டன் வந்து சென்னை விமான நிலை­யத்­தில் வந்திறங்கிய இரு தென்­கொ­ரிய பெண்­கள் கைதான விவ­கா­ரம் ஆகி­யவை பற்­றி­யும் விசாரணை நடப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கேர­ளா­விற்கு தங்­கம் கடத்தி வரப்­பட்­ட­தன் தொடர்­பில் இப்­போது தேசிய வேவுத்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது. இந்த விசாரணை இப்­போது வேக­மெடுத்து இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!