ரியா: பயங்கரவாதியைப் போல் விசாரிக்கின்றனர்

மும்பை: இந்தி நடி­கர் சுஷாந்த் சிங் கஞ்சா புகைக்­கும் பழக்­க­முள்­ள­வர் என்­றும் அவ­ரைக் கட்­டுப்­ப­டுத்த தாம் முயற்­சித்­த­தா­க­வும் நடிகை ரியா சக்­க­ர­போர்த்தி தெரி­வித்­துள்­ளார்.

சுஷாந்த் விரக்­தி­யான மன­நிலை­யில் இருந்­தது குறித்து அவ­ரது குடும்­பத்­தா­ரி­டம் தாம் தெரி­வித்த போதி­லும் அவர்­கள் கண்­டு­கொள்­ள­வில்லை என அண்­மைய பேட்­டி­யில் ரியா குறிப்­பிட்­டுள்­ளார்.

சுஷாந்த் சிங் மர­ணம் குறித்து பல்­வேறு சந்­தே­கங்­கள் எழுந்­துள்ள நிலை­யில் சிபிஐ விசா­ரணை நடத்தி வரு­கிறது.

தன் மகனை நடிகை ரியா உயிரை மாய்த்­துக்­கொள்­ளத் தூண்­டி­ய­தா­க­வும் விஷம் கொடுத்து கொலை செய்­து­விட்­ட­தா­க­வும் சுஷாந்த் தந்தை புகார் எழுப்பி உள்­ளார். ஆனால் இக்­குற்­றச்­சாட்­டு­களை ரியா மறுத்­துள்­ளார்.

“சுஷாந்த் விவ­கா­ரத்­தில் என்­னைப் பயங்­க­ர­வா­தி­யைப் போல் நடத்­து­கின்­ற­னர். சுஷாந்த் என்னை நேசித்­தார். அவ­ரது குடும்­பத்­தா­ரி­டம் இருந்து அவரை நான் தனி­மைப்­ப­டுத்­த­வில்லை. அவ­ரி­ட­மி­ருந்து நான் ஒரு ரூபாய் கூட பெற­வில்லை.

“என்­னைக் கைது செய்ய வேண்­டும் என்­கி­றார்­கள். அதற்கு முகாந்­தி­ரம் இல்லை. என்­மீது பழி போடு­வ­தால் எனது தாயார் மன­த­ள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். என் தந்தை துன்­பு­றுத்­தப்­ப­டு­கி­றார்,” என்று ரியா தெரி­வித்­துள்­ளார்.

தமக்­கும் போதைப்­பொ­ருள் கும்­ப­லுக்­கும் எந்­த­வி­தத் தொடர்­பும் இல்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், வாழ்க்­கை­யில் ஒரு­முறை கூட போதை மருந்­து­க­ளைத் தாம் பயன்­ப­டுத்­தி­ய­தில்லை எனத் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!