இந்தி தின கொண்டாட்டத்துக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு; பல இடங்களில் போராட்டம்

இந்தி பேசாத மாநி­லங்­களில் இந்தி தினத்­தைக் கொண்­டா­டு­வது ஏன்? என்று கர்­நாடக முன்­னாள் முதல்­வர் குமா­ர­சாமி கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் இந்தி தினக் கொண்­டாட்­டத்­தைக் கண்­டித்து கர்­நா­ட­கா­வின் பல்­வேறு பகு­தி­களில் நேற்று முன்­தி­னம் போராட்­டம் நடை­பெற்­றது.

கன்­னட ரக்­‌ஷன வேதிகே, கன்­னட நவ­நிர்­மாண் சேனா உள்­ளிட்ட அமைப்­பி­னர் இப்­போ­ராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். பல்­வேறு நக­ரங்­களில் உள்ள மத்­திய அர­சின் அலு­வ­ல­கங்­க­ளைப் போராட்­டக்­கா­ரர்­கள் முற்­று­கை­யிட்­ட­னர்.

பெங்­க­ளூ­ரு­வில் ரயில் நிலை­யம் முற்­று­கை­யி­டப்­பட்டு இந்­தித் திணிப்­புக்கு எதி­ரான முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன. கன்­னட அமைப்­பு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் ரயில் நிலை­யத்­தின் பெயர்ப் பல­கை­யில் இருந்த இந்தி எழுத்­து­க­ளை அகற்றினர்.

நாடு முழு­வ­தும் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று இந்தி தினம் கொண்­டா­டப்­பட்­டது. இதற்கு கர்­நா­டகா, கேரளா, மேற்கு வங்­கம், தமி­ழ­கம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. இந்­நி­லை­யில் இந்தி தினக் கொண்­டாட்­டம் என்­ப­தும்­கூட இந்­தியை திணிக்­கும் ஓர் அங்­கம்­தான் என்று குமா­ர­சாமி தெரி­வித்­துள்­ளார்.

இந்தி தேசிய மொழி அல்ல என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இந்­திய அர­சி­யல் சாச­னத்­தி­லும் அவ்­வாறு எங்­கும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். மக்­கள் கிளர்ச்சி வெடிக்­கும் முன்பு இத்­த­கைய போக்கு நிறுத்­தப்­பட வேண்­டும் என்­றும் குமாரசாமி கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!