கைதியின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட கடிதம்; உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உயிரை மாய்த்துக்கொண்ட சிறைக்கைதி ஒருவரின் வயிற்றுக்குள் கடிதம் இருந்தது தெரியவந்துள்ளது.

கொலை வழக்கில் நாசிக் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அஸ்கர் அலி, சிறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். 

தகவலறிந்த போலிசார் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அஸ்கர் அலி வயிற்றுக்குள் ‘பிளாஸ்டிக்’ கவரில் சுற்றப்பட்ட கடிதம் ஒன்று இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறைக் காவலர்கள் துன்புறுத்தி வந்ததால் உயிரை மாய்த்துக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது.

மேலும், சிறை அதிகாரிகள் ஐவரின் பெயரும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon