சுடச் சுடச் செய்திகள்

பரம்பரை ஊழல்: மோடி காட்டம்

ஊழ­லைக் கட்­டுப்­படுத்த முறை­யான பரி­சோ­த­னை­கள், வலி­மை­யான தணிக்­கை­கள், திறன் கட்­ட­மைப்பு ஆகி­யவை தேவைப்­ப­டு­வ­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய புல­னாய்வு அமைப்பு சார்­பில் (சிபிஐ) நடை­பெற்ற லஞ்ச ஒழிப்பு மற்­றும் ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாட்­டில் காணொளி வசதி மூலம் பங்­கேற்­றுப் பேசிய அவர், பரம்­பரை ஊழல் என்­பது பெரும் சவா­லாக உள்­ளது என்­றார்.

ஒரு தலை­மு­றை­யால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஊழலை அடுத்த தலை­மு­றை­யும் தொடர்­வ­து­தான் பரம்­பரை ஊழல் என்று குறிப்­பிட்ட அவர், இத்­த­கைய ஊழல் நாட்­டைக் கரை­யான்­கள் போல் அரிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

ஒரு தலை­முறை ஊழ­லில் ஈடு­பட்டு தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பு­வ­தால் அடுத்த தலை­முறை அதை­விட பெரிய ஊழ­லைச் செய்­வ­தாக அவர் கூறி­னார்.

ஒரு­வர் வீட்­டி­லி­ருந்­த­வாறே கோடிக்­க­ணக்­கான பணத்தை ஊழல் மூலம் ஈட்­டி­யும் எந்­த­வி­தப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­ட­வில்லை என்­றால், பின்­னர் ஊழல் மீதான நம்­பிக்கை மேலும் அதி­க­ரிப்­ப­தாக பிர­த­மர் மோடி தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

கடந்த பல 10 ஆண்­டு­க­ளாக பரம்­பரை ஊழல் படிப்­ப­டி­யாக வளர்ந்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அந்த ஊழல் ஒரு வலி­மை­யான வடி­வத்தை எடுத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

ஊழ­லுக்கு எதி­ரான போராட்­டம் என்­பது ஒரு நிறு­வ­னத்­தின் பணி மட்­டும் அல்ல, இது நாட்­டில் உள்ள ஒட்­டு­மொத்த அமைப்­பு­க­ளின் கடமை என்­றும் பிர­த­மர் மோடி மேலும் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon