உலக அளவில் சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு

இந்­தி­யா­வைச் சேர்ந்த ரஞ்­சித் சின்ஹ் என்­ப­வர் உல­க­ள­வில் சிறந்த ஆசி­ரி­ய­ரா­கத் தேர்வு பெற்­றுள்­ளார். அவ­ருக்கு 7.50 கோடி ரூபாய் பரிசு கிடைத்­துள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வைச் சேர்ந்த ரஞ்­சித், ஆரம்­பப் பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­று­கி­றார். பரித்­வாடி என்ற கிரா­மத்­தில் மாட்­டுக் கொட்­ட­கை­யு­டன் சேர்ந்­தாற்­போல் இப்­பள்ளி இயங்கி வந்­தது. கடந்த 2009ஆம் ஆண்டு ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யைத் தொடங்­கிய ரஞ்­சித் பள்­ளி­யைச் சீர­மைத்­தார்.

பாடங்­க­ளைத் தாய்­மொ­ழி­யில் மொழி­பெ­யர்த்து, கற்­றல், கற்­பித்­த­லில் சில சீர்­தி­ருத்­தங்­க­ளைக் கொண்­டு­வந்து மாண­வர்­க­ளின் முன்­னேற்­றத்­துக்கு வழி­வ­குத்­தார். பெண் கல்­வியை ஊக்­கப்­ப­டுத்த இவர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக அக்­கி­ரா­மத்­தில் சிறு­வர் திரு­ம­ணம் அறவே நின்­றுள்­ளது.

பள்­ளிப் புத்­த­கங்­களில் ‘கியூ­ஆர்’ கோடு தொழில்­நுட்­பத்­தைப் புகுத்தி மாண­வர்­கள் ஒலி, ஒளி வச­தி­யு­டன் பாடங்­க­ளைப் படிக்­கும் முறையை அறி­மு­கம் செய்த ரஞ்­சித், பின்­னர் பிரச்­சி­னை­க­ளுக்­கு­ரிய இரு நாடு­க­ளின் மாண­வர்­களை இணை­யம் வழி உரை­யாட வைத்து அவ­ர்களிடையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­யி­லும் ஈடு­பட்­டுள்­ளார்.

இது­வரை இந்­தியா- பாகிஸ்­தான், பாலஸ்­தீ­னம்-இஸ்­ரேல், ஈராக்-ஈரான், அமெ­ரிக்கா-வட­கொ­ரியா நாடு­க­ளைச் சேர்ந்த 19 ஆயி­ரம் மாண­வர்­கள் இந்த இணைய உரை­யா­டல் நிகழ்­வில் பங்­கேற்­றுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் லண்­ட­னைச் சேர்ந்த வர்க்கி அறக்­கட்­டளை இவ­ரைச் சிறந்த ஆசி­ரி­ய­ரா­கத் தேர்வு செய்­துள்­ளது.

இந்­தி­யா­வைச் சேர்ந்த சன்னி வர்க்கி என்ற கல்­வி­யா­ளர் கடந்த 2014ஆம் ஆண்டு இந்த அறக்­கட்­ட­ளையை நிறு­வி­னார். இம்­முறை சிறந்த ஆசி­ரி­யர் விரு­துக்கு 140 நாடு­க­ளைச் சேர்ந்த சுமார் 12 ஆயி­ரம் ஆசி­ரி­யர்­கள் விண்­ணப்­பித்­த­னர். இவர்­களில் 10 பேர் இறு­திச் சுற்­றுக்­குத் தேர்­வா­கி­னர். இறு­தி­யில் ரஞ்­சித் சின்ஹ் திசேல் சிறந்த ஆசி­ரி­ய­ரா­கத் தேர்வு செய்­யப்­பட்­டார்.

அவர் தமக்கு வழங்­கப்­பட்ட பரி­சுத் தொகை­யில் 50 விழுக்­காட்டை இறு­திச் சுற்­றுக்­குத் தேர்­வான மீத­முள்ள 9 ஆசி­ரி­யர்­க­ளின் கல்­விப் பணிக்­காக பகிர்ந்­த­ளிக்­கப் போவ­தாக தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!