2½ வயது சிறுவனின் உடல் உறுப்பு தானத்தால் 5 சிறுவர், சிறுமியர் உயிர் பிழைத்தனர்

மூளைச்சாவு அடைந்த இரண்டரை வயது சிறுவனின் உள்ளுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் ஐந்து பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இவர்களில் ரஷ்யா மற்றும் உக்ரைனைச் சேர்ந்த 4 வயதுக் குழந்தைகள் இருவரும் அடங்குவர்.

சூரத்தைச் சேர்ந்த ஜாஸ் ஓசா என்ற இரண்டரை வயதுச் சிறுவன் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இரண்டாவது மாடியில் இருந்து கால்தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தான்.

இதையடுத்து சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாக கடந்த 14ஆம் தேதி மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவனின் இதயம், கல்லீரல், நுரையீரல், கண்கள், இரு சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகளை தானமாக வழங்க சிறுவனின் தந்தை சஞ்சீவ், தாய் ஆராச்சனா ஆகியோர் முன்வந்தனர்.

இதையடுத்து சிறுவனின் இதயமும் நுரையீரலும் சூரத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு வயது குழந்தைக்கு இதயமும் உக்ரைனைச் சேர்ந்த நான்கு வயது குழந்தைக்கு நுரையீரலும் பொருத்தப்பட்டன.

இதேபோல் அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுவன் ஜாஸ் ஓசாவின் சிறுநீரகங்கள், 13 மற்றும் 17 வயது சிறுமிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன.

சிறுவனின் கல்லீரல் இரண்டு வயது பெண் குழந்தைக்கு பொருத்தப்பட்டதை அடுத்து அது உயிர் பிழைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தை சஞ்சீவ் உள்ளூர் நாளேடு ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றுகிறார். சஞ்சீவ், ஆராச்சனா தம்பந்தியருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.

உடல் உறுப்பு தானம் குறித்து சஞ்சீவ் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில், அவரே தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க நேரிட்டுள்ளது என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!