காவிரி - குண்டாறு திட்டம்: தமிழக அரசை சாடும் எடியூரப்பா

தமி­ழக அரசு காவிரி நடு­வர் மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்­புக்கு எதி­ரா­கச் செயல்­ப­டு­கிறது என கர்­நா­டக முதல்­வர் எடி­யூ­ரப்பா தெரி­வித்­துள்­ளார்.

கர்­நா­டக அர­சின் ஒப்­பு­தல் இல்­லா­ம­லேயே தமி­ழக அரசு காவிரி - குண்­டாறு திட்­டத்தைத் தொடங்கி இருப்­ப­தாக அவர் சாடி­யுள்­ளார்.

“இந்­தத் திட்­டம் தொடர்­பாக மத்­திய அர­சி­டம் தமி­ழ­கம் கொள்கை ரீதி­யான அனு­மதி கேட்­டுள்­ளது.தமி­ழக அர­சின் இந்த நட­வ­டிக்கை காவிரி நடு­வர் மன்ற இறு­தித் தீர்ப்பு, காவிரி நதி­நீர் பங்­கீட்டு வழக்­கில் 2018ஆம் ஆண்டு உச்ச நீதி­மன்­றம் பிறப்­பித்த இறு­தித் தீர்ப்­புக்கு எதி­ரா­னது," என்று முதல்­வர் எடி­யூ­ரப்பா கூறி­யுள்­ளார்.

இந்­தத் திட்­டத்­துக்கு தமி­ழ­கம் தேர்வுசெய்­துள்ள இடம் தவ­றா­னது என்­றும் இத்­திட்­டத்­தால் மண்­டியா மாவட்­ட­மும் பெங்­க­ளூரு மாந­க­ர­மும் நேர­டி­யாக பாதிக்­கப்­படும் என்று மக்­கள் அச்­சப்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

எனவே மத்­திய அரசு, இந்தத் திட்­டத்­துக்கு அனு­மதி அளிக்­கக்கூடாது என்று கூறி­யுள்ள முதல்­வர் எடி­யூ­ரப்பா, இத்­திட்­டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்­டும் என­வும் வலி­யு­றுத்தி உள்­ளார்.

காவிரி - குண்­டாறு திட்­டத்தை தமிழக அரசு செயல்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது என கர்நாடக எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!