மத்திய அரசை விமர்சித்த பாஜக மாநில அமைச்சர்

பெங்­க­ளூரு: மத்­தி­யில் உள்ள பாஜக அரசு சர்­வா­தி­கா­ரப் போக்­கில் செயல்­ப­டு­வ­தாக கர்­நா­டக மாநில நீர்ப்­பா­ச­னத்­துறை அமைச்­சர் மாது­சாமி கூறி­யுள்­ளார்.

இத்­த­கைய போக்­கால் நாட்­டின் ஒற்­று­மைக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சாடி­யுள்­ளார்.

மத்­திய அரசை பாஜக மாநில அமைச்­சர் ஒரு­வரே இவ்­வாறு குறை கூறி இருப்­ப­தும் குற்­றம்­சாட்­டு­வ­தும் அக்­கட்சி வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மைசூ­ரு­வில் உள்ள கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற விழா­வில் கலந்து கொண்டு பேசி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

"மத்­திய அர­சின் சில நட­வ­டிக்­கை­க­ளால் மக்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மாநி­லத்­திடம் உள்ள சில துறை­களை மத்­திய அரசு தன்­வ­சம் சேர்த்துக் கொண்டு வரு­கிறது. இத­னால் வேலை­வாய்ப்பு திண்­டாட்­டம் ஏற்­ப­டு­கிறது.

"மத்­திய அரசு பணக்­கா­ரர்­க­ளுக்­கும் பெரிய தொழில் அதி­பர்­க­ளுக்­கும் சாத­க­மாக பல சலு­கை­களை அளித்து அவர்­களை இன்­னும் பெரும் பலம் வாய்ந்­த­வர்­க­ளாக உரு­வாக்­கு­கிறது," என்­றார் அமைச்­சர் மாது­சாமி.

கர்­நா­ட­கா­வில் பிர­த­மர் மோடி தொடங்கி வைத்த நிறு­வ­னங்­கள் கன்­ன­டர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கா­மல் தொடர்ந்து புறக்­க­ணிக்­கப்­படுவ­தா­கக் குறிப்­பிட்ட அவர், எது நடந்­தா­லும் தட்­டிக் கேட்­கா­த­தால்­தான் கர்­நா­ட­கா­வுக்கு இப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!