22 படைவீரர்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்

பாட்னா: சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­கும் மாவோ­யிஸ்ட் கிளர்ச்­சிப் படை­யி­ன­ருக்­கும் இடை­யில் நிகழ்ந்த மோத­லில் படை­வீ­ரர்­கள் 22 பேர் உயிரிழந் தனர். எதிர்த்­த­ரப்­பி­லும் பெருத்த உயிர்ச்­சே­தம் நிகழ்ந்­தி­ருப்­ப­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

மாநி­லத்­தின் சுக்மா-பிஜப்­பூர் மாவட்ட எல்­லை­யில் உள்ள சிலே­கர் வனப்­ப­கு­தி­யில் மாவோ­யிஸ்­டு­கள் பெரிய அள­வில் பதுங்கி இருப்­ப­தா­கக் கிடைத்­தத் தக­வ­லைத் தொடர்ந்து சனிக்­கி­ழமை இரவு பாது­காப்பு படை­யி­னர் அங்கு தீவிர தேடு­தல் வேட்­டை­யில் இறங்­கி­னர்.

சிஆா்பி­எஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயு­தக் காவற்­படை, சிறப்பு அதி­ர­டிப்­படை உள்­ளிட்ட படைப் பிரி­வு­க­ளைச் சோ்ந்த வீரா்கள் கூட்­டாக இந்­ந­ட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது அடர்ந்த வனப்­ப­கு­திக்­குள் மறைந்­தி­ருந்த மாவோ­யிஸ்­டு­கள், பாது­காப்­புப் படை­யி­னரை நோக்கி கண்­மூ­டித்­த­ன­மாக துப்­பாக்­கிச்­சூடு நடத்­தினா். மின்­னல்­வே­கத்­தில் பாது­காப்­புப் படை­யி­ன­ரும் பதி­லடி கொடுத்­தனா்.

இந்த மோத­லில் பாது­காப்­புப் படை வீரர்­கள் ஐவர் மாண்­ட­தாக சனிக்­கி­ழமை இரவு தெரிய வந்­தது. அதே­நே­ரம் 20க்கும் மேற்­பட்ட வீரர்­கள் என்ன ஆனார்­கள் என்று தெரி­யாத நிலை உரு­வா­னது. கூடு­தல் படைப் பிரிவினர் அனுப்­பப்­பட்டு மாய­மான வீரர்­க­ளைத் தேடும் பணி தொடங்­கி­யது.

அவ்­வாறு தேடப்­பட்­ட­போது வனப் பகு­தி­யில் ஆங்­காங்கே வீரர்­க­ளின் உடல்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. அவ்­வாறு 17 உடல்­கள் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் இத­னால் மோத­லில் உயி­ரி­ழந்த வீரர்­க­ளின் எண்­ணிக்கை 22ஆக அதி­க­ரித்­து­விட்­ட­தா­க­வும் மாநில கூடு­தல் தலைமை போலிஸ் அதி­காரி அசோக் ஜுனெஜா கூறி­ய­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்டு உள்­ளது.

மாவோ­யிஸ்­டு­க­ளின் தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்­தோர் தவிர பல வீரர்­கள் காய­முற்­ற­னர். அவர்­கள் அனை­வ­ரும் ராய்ப்­பூ­ரில் வெவ்­வேறு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இந்த சண்­டை­யில் மாவோ­யிஸ்­டு­கள் தரப்­பி­லும் பலத்த உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று நம்­பப்­

ப­டு­கிறது.

மாண்ட வீரர்­க­ளுக்கு ஜக்­தல்­பூர் ராணுவ முகா­மில் இறுதி மரி­யாதை செலுத்­தப்­பட்­டது.

தாக்­கு­தல் சம்­ப­வம் குறித்து அதிர்ச்சி தெரி­வித்த பிர­த­மர் மோடி, வீர­ம­ர­ணம் அடைந்த வீரர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு இரங்­கல் தெரி­வித்து டுவிட்­டர் பதிவு ஒன்றை வெளி­யிட்­டார். வீரர்­க­ளின் தியா­கம் ஒரு­போ­தும் வீணா­காது என்று அதில் அவர் கூறி­யுள்­ளார்.

சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் கடந்த 10 நாட்­களில் நடை­பெற்­றி­ருக்­கும் இரண்­டா­வது பெரிய மாவோ­யிஸ்டு தாக்­கு­தல் சம்­ப­வம் இது. மார்ச் 23ஆம் தேதி நாரா­யண்­பூர் மாவட்­டத்­தில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லில் வீரர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!