தடுப்பூசி முறைகேட்டைத் தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தடுப்­பூசி கடந்த ஜன­வரி 16 ஆம் தேதி முதல் போடப்­பட்டு வரு­கிறது. முதல்­கட்­ட­மாக சுகா­தார மற்­றும் முன்­கள பணி­யா­ளர்­க­ளுக்குப் போடப்­பட்­டது. இதன்­பி­றகு, மார்ச் 1 முதல் 60 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. ஏப்­ரல் 1 முதல் 45 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என அறி­விக்­கப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து ஏரா­ள­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­வந்­துள்­ள­னர். அவர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் பணி தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கிறது. இந்­நி­லை­யில் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் புதி­தாக பதிவு செய்­ய­வேண்­டாம் என மத்­திய சுகா­தா­ரத்­துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

டெல்­லி­யில் தடுப்­பூசி போடு­வ­தில் முறை­கே­டு­கள் நடப்­ப­தா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ள­தைத் தொடர்ந்து அந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது. சுகா­தார மற்­றும் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் என்ற பெய­ரில் தகு­தி­யற்­ற­வர்­கள் தங்­கள் பெயர்­க­ளைப் பதி­வு­செய்­துள்­ள­தாக டெல்­லி­யில் இருந்து சுகா­தா­ரத் துறைக்­குத் தக­வல் கிடைத்­தது.

அதன்­படி ஏற்­க­னவே தங்­கள் பெயர்­க­ளைப் பதிவு செய்­துள்ள சுகா­தார, முன்­க­ளப் பணி­யா­ளர்­களும் 45 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களும் தடுப்­பூசி போட­லாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே நேரம் சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் என புதி­தாக வரும் எந்­தப் பதி­வை­யும் ஏற்­க­வேண்­டாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!