மத்திய அரசு தண்டித்துள்ளது: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் மத்திய அரசு புதிய மசோதா மூலம் டெல்லி அரசை தண்டித்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் சங்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், டெல்லியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் தராமல் ஆளுநருக்கு தரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

"விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்ததால் எங்களைத் தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங் கப்பட்டுள்ளது. இதற்கு அதிபரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

"வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத் தின்போது இறந்த விவசாயிகள் 300 பேரின் தியாகத்துக்கு தலைவணங்குகிறோம். அந்தத் தியாகம் நிச்சயம் வீண் போகாது," என்றார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தாம் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை மத்திய அரசு வேண்டும் என்றே தேசத்துரோகி என முத்திரை குத்துவதாகச் சாடினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!