மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு

மத்திய சுகாதார அமைச்சு: இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவுகிறது

மும்பை: நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு படு­வே­க­மாக அதி­க­ரித்து வரும் நிலை­யில் மகா­ராஷ்­டி­ரா­வில் ஒரே நாளில் சுமார் 55 ஆயி­ரம் பேர் புதி­தாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். நேற்று முன்­தி­னம் 297 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

தமி­ழர்­கள் அதி­கம் வசிக்­கும் ஆசி­யா­வின் ஆகப்­பெ­ரிய குடி­சைப் பகு­தி­யான தாரா­வி­யில் ஒரே­நா­ளில் புதி­தாக 62 பேர் பாதிக்­கப்­பட்­டது உறு­தி­யா­னது.

மகா­ராஷ்­டி­ரா­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 3.12 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் பலி எண்­ணி்க்கை 56,330ஆக உள்­ளது என்­றும் அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது. இப்­போது 472,283 பேர் நோய்த் தொற்­றுக்குச் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

மும்பை மாநகரில் மட்டும் நேற்று முன்­தி­னம் புதி­தாக சுமார் 10 ஆயி­ரம் பேருக்கு கிரு­மித்­தொற்று பாதிப்­புள்­ளது கண்­ட­றி­யப்­பட்­டது. அங்கு ஒரே நாளில் 31 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா தொற்று அதி­க­ரிக்க புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­களே கார­ணம் என்று மகா­ராஷ்­டிரா நவ­நிர்­மாண் சேனா தலை­வர் ராஜ் தாக்­கரே கூறி­யுள்­ளார்.

“இந்தியாவிலேயே மகா­ராஷ்­டி­ரா­தான் அதிக அள­வில் தொழில்மயமான மாநி­லம். இத­னால் இங்கு பணி­யாற்ற வெளி­மா­நிலங்­களில் இருந்து அதி­க­ள­வில் தொழி­லா­ளர்­கள் இங்கு வரு­கின்­ற­னர்,” என்று ராஜ்­தாக்­கரே சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

டெல்லி, மும்பை, பெங்­க­ளூரு உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்­களில் பாதிப்பு அதி­க­ரித்து வரும் நிலை­யில், கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யில் அடுத்த நான்கு வாரங்­கள் மிகவும் நெருக்­க­டி­யா­னவை என்று மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மத்­திய சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ராஜேஷ் பூஷண், கொரோனா முதல் அலையைவிட இரண்­டா­வது அலை­யின் வேகம் மிக அதி­க­மாக உள்­ளது என்­றார்.

இரண்டாவது அலை­யைக் கட்­டுப்­ப­டுத்துவ­தில் மக்­க­ளின் பங்­க­ளிப்பு அவ­சி­யம் என்று குறிப்­பிட்ட அவர், கொரோனா பாதிப்­பால் ஏற்­படும் பலி எண்­ணிக்­கையைக் குறைப்­ப­து­தான் தடுப்­பூ­சி­யின் முக்கிய நோக்­கம் என்­றார்.

இந்­தி­யா­வில் அதி­க­ரித்து வரும் கொரோனா பாதிப்பு கார­ண­மாக தடுப்­பூசி ஏற்­று­மதி குறைய வாய்ப்­புள்­ள­தாக தடுப்­பூசி, நோய் எதிர்ப்பு மருந்­திற்­கான அனைத்­து­ல­கக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் புதி­தாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை சுமார் 115,000ஆக பதி­வா­கி உள்­ளதை அந்த அமைப்பு சுட்­டிக்­காட்டி உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.