அதிகரிக்கும் கிருமித்தொற்று: ஒரே நாளில் 126,789 பேர் பாதிப்பு

தடுப்பூசிக்குப் பிறகும் 40 மருத்துவர்களுக்கு தொற்று; ஒரே நாளில் 685 பேர் பலி

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 126,789 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மேலும் 685 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

அண்­மைய சில தினங்­க­ளாக நாடு முழு­வ­தும் பல்­வேறு மாநி­லங்­களில் கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்­துள்­ளது. தற்­போது அன்­றாட பாதிப்­பு­க­ளின் எண்­ணிக்கை ஒரு லட்­சத்­தைக் கடந்து பதி­வாகி வரு­கிறது.

குறிப்­பாக மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் அன்­றா­டம் ஐம்­ப­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு கிருமி தொற்றி வரு­வ­தாக அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் மகா­ராஷ்­டி­ரா­வில் 59,907 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் தடுப்­பூசி பற்­றாக்­குறை கார­ண­மாக அம்­மா­நி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கான மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்­பாக பல்­வெல் மாநக­ராட்சி நிர்­வா­கம் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் தடுப்­பூ­சி­கள் வந்து சேர்ந்­த­பின்­னர் மீண்­டும் தடுப்­பூசி போடும் பணி துவங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் மகா­ராஷ்­டிரா அரசு தடுப்­பூசி போடு­வது, கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது ஆகிய பணி­களில் தோல்வி அடைந்­துள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன் சாடி­யுள்­ளார்.

சில மாநில அர­சு­கள் இத்­த­கைய தோல்­வி­களை மறைப்­ப­தற்­காக கிருமித் தொற்­றுப்­ப­ர­வல் குறித்து மக்­கள் மத்­தி­யில் பீதி கிளப்பி வரு­வ­தா­க­வும் அவர் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

நியூ­சி­லாந்து தடை

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் கொரோனா பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தால் நியூ­சி­லாந்­துக்­குள் நுழைய இந்­திய பய­ணி­க­ளுக்கு அனு­ம­தி­யில்லை என அந்­நாட்­டுப் பிர­த­மர் ஜெசிந்தா அறி­வித்­துள்­ளார்.

ஏப்­ரல் 11 முதல் 28ஆம் தேதி வரை இந்­தத் தடை உத்­த­ரவு அம­லில் இருக்­கும் என­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

தடுப்பூசி போட்டுக்­கொண்ட பிரதமர் மோடி

இதற்­கி­டையே இரண்­டாம் தவ­ணை­யாக கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொண்­டார் பிர­த­மர் நரேந்­திர மோடி.

முன்­ன­தாக டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் அவர் முதல் முறை தடுப்­பூ­சி­யைப் போட்­டுக் கொண்­டார்.

புது­வை­யைச் சேர்ந்த நிவேதா, பஞ்­சாப் மாநி­லத்­தைச் சேர்ந்த நிஷா சர்மா ஆகிய இரு தாதி­யர் பிர­த­ம­ருக்கு நேற்று தடுப்­பூசி போட்­ட­னர்.

தடுப்­பூ­சிக்­குப் பிற­கும் 40 மருத்து­வர்­க­ளுக்கு தொற்று

இந்­நி­லை­யில் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் தடுப்­பூசி போட்­டுக் கொண்ட பிறகு 40 மருத்­து­வர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு இருப்­பது தெரிய வந்­துள்­ளது.

லக்­னோ­வில் உள்ள கிங் ஜோர்ஜ் மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் துணை வேந்­த­ருக்­கும் மருத்­து­வர்­க­ளுக்­கும் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பே தடுப்­பூசி போடப்­பட்­டது.

இந்­நி­லை­யில் கடந்த நான்கு தினங்­களில் நாற்­பது மருத்­து­வர்­க­ளுக்கு நோய்த்­தொற்று இருப்­பது உறு­தி­யா­ன­தாக பல்­கலை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!