கோல்கத்தா: 8 தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் நீக்கம்

கோல்­கத்தா: மேற்கு வங்­கத்­தில் எட்டு தொகு­தி­க­ளுக்­கான தேர்­தல் அதி­கா­ரி­களை அப்­பொ­றுப்­பில் இருந்து அதி­ர­டி­யாக நீக்­கி­யுள்­ளது மத்­திய தேர்­தல் ஆணை­யம்.

இது வழக்­க­மான நடை­மு­றை­தான் என மேற்கு வங்க தலை­மைத் தேர்­தல் அதி­காரி விளக்­கம் அளித்த நிலை­யில், ஆளும் திரி­ணா­முல் காங்­கி­ர­சுக்கு ஆத­ர­வா­கச் செயல்­ப­டு­வ­தாக எழுந்த புகார்­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

மேற்கு வங்க மாநி­லத்­தில் எட்டு கட்­டங்­க­ளாக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெ­று­கிறது. ஏற்­கெ­னவே மூன்று கட்ட வாக்­குப்­ப­திவு நடந்து முடிந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் தேர்­தல் அதி­கா­ரி­கள் சிலர் ஆளுங்­கட்­சிக்கு ஆத­ர­வா­கச் செயல்­ப­டு­கின்­ற­னர் என்று சில புகார்­கள் எழுந்­தன. குறிப்­பாக ஏழு, எட்­டாம் கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெற உள்ள கோல்­கத்தா நக­ரில் பல்­வேறு விதி­மீ­றல்­கள் நடப்­ப­தா­க­வும் கூறப்­பட்­டது. இதை­ய­டுத்து கோல்­கத்­தா­வில் உள்ள சவு­ரிங்கி, என்­டல்லி, பவா­னி­பூர், பெலி­ய­கடா, ஜோர­சங்கோ, ஷ்யாம்­பு­குர், காசி­பூர்-பெல்­கச்­சியா, கொல்­கத்தா துறை­மு­கம் ஆகிய எட்டு தொகு­தி­க­ளின் தேர்­தல் அதி­கா­ரி­கள் அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­ட­னர்.

அப்­பொ­றுப்­பில் புதிய அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக மேற்கு வங்க தலை­மைத் தேர்­தல் அதி­காரி ஆரிஸ் அப்­தாப் தெரி­வித்­துள்­ளார்.

தேர்­தல் அதி­கா­ரி­களை மாற்­று­வது வழக்­க­மான நட­வ­டிக்­கை­தான் என்­றும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு மேல் அப்­ப­ணி­யில் இருப்­ப­வர்­கள் மாற்­றப்­ப­டு­வ­தா­க­வும் அவர் விளக்­கம் அளித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!