தேர்தலில் பணியாற்றாத திமுகவினர் மீது நடவடிக்கை: ஸ்டாலின் திட்டம்

சென்னை: தேர்­தல் சம­யத்­தில் பணி­யாற்­றா­மல் ஒதுங்­கி­யி­ருந்த திமுக அதி­ருப்­தி­யா­ளர்­க­ளின் பட்­டி­ய­லைத் தயா­ரிக்க திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டி­ருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது. அவர்­கள் மீது விரை­வில் நட­வ­டிக்கை பாயும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இத­னால் தேர்­த­லில் பணி செய்­யா­மல் ஜாடை காட்­டி­ய­வர்­கள் கலக்­கம் அடைந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் ஒரே கட்­ட­மாக தமி­ழ­கத்­தில் சட்­ட­சபைத் தேர்­தல் வெற்­றி­க­ர­மாக நடந்து முடிந்­துள்­ளது. இந்­தத் தேர்­த­லில் ஆளும் கட்­சி­யான அதி­மு­க­வும் எதிர்க்­கட்­சி­யான திமு­க­வும் இது­வரை இல்­லாத புதிய உத்­தி­க­ளைப் பயன்­ப­டுத்­தின. அதா­வது தேர்­தல் நிபு­ணர்­களைத் துணைக்கு வைத்­துக்­கொண்டு தேர்­தலைச் சந்­தித்­த­ன.

அவர்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி பல்­வேறு உத்­தி­கள் எதி­ர­ணி­க­ளுக்கு எதி­ராக வகுக்­கப்­பட்டு பிர­சா­ரங்­கள் செய்­யப்­பட்­டன. இதன் கார­ண­மாக சமூக வலைத்­த­ளங்­களில் மிகப்­பெ­ரிய தாக்­க­மும் இருந்­தது.

தேர்­த­லுக்கு பிந்­தைய கருத்­துக்­ க­ணிப்­பு­களை வெளி­யிட தேர்­தல் ஆணை­யம் ஏப்­ரல் 29ஆம் தேதி வரை தடை விதித்­துள்­ள­தால் யாருக்குச் சாத­க­மாக மக்­கள் வாக்­க­ளித்­தார்­கள் என்ற தக­வல்­களை இது­வரை ஊட­கங்­கள் வெளி­யி­ட­வில்லை.

இந்­தச் சூழ­லில் சட்­ட­சபை தேர்­த­லில் முந்­தைய தேர்­தல்­க­ளை­விட குறை­வான வாக்­குப்­ப­திவு நடந்­தி­ருந்­தது. இத­னால் தேர்­தல் முடி­வு­கள் யாருக்கு சாத­க­மாக இருக்­கும் அல்­லது யாருக்கு பாத­க­மாக இருக்­கும் என்­ப­தும் தெரி­ய­வில்லை. இந்த நிலை­யில் தேர்­தல் பணி செய்­யா­மல் ஒதுங்­கிய அதி­ருப்­தி­யா­ளர்­க­ளின் பட்­டி­ய­லை­யும் ஸ்டா­லின் கேட்­டா­ராம். அவர்­க­ளின் பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது. அவர்­கள் மீது மே 2ஆம் தேதிக்­குப் பிறகு நட­வ­டிக்கை பாய­லாம் என்­கி­றார்­கள் திமுக வட்­டா­ரத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!