ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டி யானை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டி யானை நீண்டநேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டது.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் உணவு தேடி இரவு நேரத்தில் வந்த யானைக்குட்டி ஒன்று அங்கிருந்த ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. 15 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் இருந்து யானையின் சத்தம் கேட்டு வனத்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த மீட்புப் படையினர், மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் உதவியுடன் யானை குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு யானை பத்திரமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குட்டி யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது. அதன் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்படும் என்றும் ஒடிசா மாநில வனத்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!