நீதிமன்றம்: பாடம் கற்றுக்கொள்ளுங்கள்

புது­டெல்லி: “தவ­று­களை திருத்­திக்­கொள்­ளவே நீதி­மன்­றங்­கள் கடு­மை­யான வார்த்­தை­களை பயன் ­ப­டுத்­து­கின்­றன. நீதி­ப­தி­கள் கடு­மை­யான வார்த்­தை­களை கூறு­கி­றார்­கள் என்­றால் அதில் இருந்து பாடம் கற்­றுக்கொள்­ளுங்­கள்,” என்று தேர்­தல் ஆணை­யத்­துக்கு உச்ச நீதி­மன்ற அமர்வு கடு­மை­யா­கக் கூறி­யுள்­ளது.

தேர்­தல் ஆணை­யத்­திற்கு எதி­ராக சென்னை உயர் ­நீ­தி­மன்­றம் கூறிய கடு­மை­யான கருத்­திற்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்­தில் தேர்­தல் ஆணை­யம் முறை­யீடு செய்­தது.

கொரோனா தொற்­று­நோ­யின் கொடிய இரண்­டா­வது அலைக்கு மத்­தி­யில் வாக்­கெ­டுப்­பு­களை நடத்­தி­யது தொடர்­பாக சென்னை உயர் நீதி­மன்­றம் கூறிய கருத்து, தேர்­தல் ஆணை­யத்தை இழி­வு­ப­டுத்­தும் வகை­யில் இருப்­ப­தா­க­வும் தேர்­தல் ஆணை­யம் தனது மனு­வில் கூறி­யி­ருந்­ததாக மாலை மலர் தெரி வித்து. இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.

இதனை நீதி­ப­தி­கள் டிஒய் சந்­தி­ர­சூட், எம்­ஆர் ஷா ஆகி­யோர் அடங்­கிய அமர்வு விசா­ரித்­தது.

அப்­போது தங்­கள் தரப்பு விளக்­கத்தை கேட்­கா­மலே வாய்ப்பு தரா­மலே சென்னை உயர் நீதி­மன்­றம் குற்­றம்­சாட்­டி­யுள்­ள­தாக தேர்­தல் ஆணை­யம் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து பேசிய உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள், “உள்­நோக்­கத்­து­டன் உயர்­ நீ­தி­மன்­றம் கருத்து கூற­வில்லை, கருத்­து­களை சரி­யான முறை­யில் எடுத்­து­கொள்­ளுங்­கள்,” என்று தேர்­தல் ஆணை­யத்தை அறி­வு­றுத்­தி­னர்.

“கொரோனா பர­வ­லுக்கு தேர்­தல் ஆணை­யமே கார­ணம் என்று சென்னை உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் கூறி­னால், அந்­தத் தவறை சரி செய்ய முயற்சி செய்­யுங்­கள். நீதி­மன்­றத்­தில் நடப்­பதை செய்­தி­யாக்­கும்­போது நீதி­ப­தி­களை மேலும் கண்­ணி­ய­மாக செயல்­ப­ட­வைக்­கிறது,” என்­றும் நீதி­ப­தி­கள் கூறி­னர்.

கடந்த வாரம் கொரோனா தடுப்பு விதி­மு­றை­கள் தொடர்­பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

அப்போது, “கொரோனா 2ஆம் அலை பர­வ­லுக்கு தேர்­தல் ஆணை­ ய­மும் ஒரு கார­ணம் என்று கூறி­னர். மேலும், தேர்­தல் நேரத்­தில் கொரோனா பர­வலைத் தடுக்க தேர்­தல் ஆணை­யம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றும் கொரோ­னா­வால் ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­க­ளுக்­காக தேர்­தல் ஆணை­யம் மீது கொலை குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­னா­லும் தவ­றில்லை என்­றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடு­மை­யாக குற்­றம்­சாட்­டியிருந்த னர். இதனால் தேர்தல் ஆணையம் இப்படி பொங்கி எழுந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!