‘புதுவை வளர்ச்சிக்கு முன்னுரிமை’

புதுவை: புது­வை­யில் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யுள்ள என்.ஆர்.காங்­ கிரஸ் தலை­வர் ரங்­க­சாமி, மாநில வளர்ச்­சிக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்படும் என்று உறுதி தெரி­வித்­துள்­ளார். சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தட்­டாஞ்­சா­வடி தொகு­தி­யில் வெற்றி பெற்ற அவர், வி.வி.பி. நக­ரில் உள்ள கூட்­டு­றவு சங்க அலு­வ­ல­கத்­தில் தேர்­தல் அதி­காரி முக­மது மன்­சூ­ரி­ட­மி­ருந்து வெற்றி சான்­றி­த­ழைப் பெற்றுக் கொண்­டார்.

தேர்­த­ல் வெற்­றியைத் தொடர்ந்து ரங்­க­சாமி அறிக்கை விடுத்­துள்­ளார். அதில் புது­வையை வளர்ச்­சிப் பாதைக்கு இட்­டுச் செல்­வேன் என்று அவர் கூறி­யுள்­ளார்.

"புதுவை சட்­ட­சபைத் தேர்­த­லில் தேசிய ஜன­நா­யக கூட்­டணி வேட்­பா­ளர்­க­ளுக்கு பேரா­த­ரவு தந்து வெற்­றி­பெறச் செய்த புதுவை மாநில வாக்­காள பெரு­மக்­க­ளுக்கு மன­மார்ந்த நன்­றி­களை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

"புதுவை மக்­க­ளின் பெருமளவு நம்­பிக்­கையை பெற்­றுள்ள நாங்­கள் மாநி­லத்­தின் தொழில் வளர்ச்சி, வேலை­ வாய்ப்­பு­கள், கல்வி, சுகா­தா­ரம் போன்ற துறை­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து மாநி­லத்­தின் ஒட்­டு­மொத்த வளர்ச்­சிக்கு பாடு­ ப­டு­வோம் என்று உறுதி அளிக்­கி­றோம்.

"முதல் காரிய­மாக தற்­போது பெருஞ்­சிக்­க­லாக உரு­வெ­டுத்­துள்ள கொரோனா பெருந்­தொற்றை எதிர்­கொள்­வ­தில் மாநில அர­சும் மத்­திய அர­சும் இணைந்து பணி­யாற்றி வெற்றி பெறு­வ­தற்கு பொது­மக்­கள் ஒத்­து­ழைக்க வேண்­டு­கி­றோம்," என்று அறிக்­கை­யில் ரங்­க­சாமி தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!