‘அண்ணா’ உணவகங்களாக மாறும் அம்மா உணவகங்கள்

சென்னை: தமிழகத்தில் உள்ள ‘அம்மா’ உணவகங்கள் விரைவில் ‘அண்ணா’ உணவகங்கள் எனப் பெயர் மாற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக நாளை அரியணையில் அமரவிருக்கிறது.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள், அதே பெயரில் நீடிப்பதைத் திமுகவினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரையோ, திமுக தலைவர் ஸ்டாலின் பெயரையோ அதற்குச் சூட்டினால் அதிமுகவினரிடம் இருந்து எதிர்ப்புகள் எழக்கூடும்.

அதனால், இரு திராவிடக் கட்சிகளுக்கும் பொதுவாக மறைந்த முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் நினைவாக, ‘அண்ணா’ உணவகங்கள் எனப் பெயர் மாற்றம் செய்தால் அதனை அதிமுகவினர் எதிர்க்க மாட்டார்கள் என திமுக கருதுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வந்ததை அடுத்து, அம்மா உணவகங்களில் உள்ள அம்மா என்ற பெயரும் ஜெயலலிதாவின் பெயரும் தாள் ஒட்டி மறைக்கப்பட்டது. தேர்தல் முடிவடைந்தபோதும் அவை இன்னும் அகற்றப்படவில்லை. அந்தத் தாள்களை அகற்ற வேண்டாம் என வாய்மொழி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அம்மா உணவகங்களின் பெயரை மாற்றத் திட்டமிட்டிருப்பதை திமுக செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் உறுதிப்படுத்தியுள்ளார் என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

“அந்த உணவகங்களின் தரத்தை மேம்படுத்துவோம் என்று எங்களது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தோம். அந்த உணவகங்களுக்கு ஒரே ஒரு பெயர் மட்டுமே இருக்க முடியும். திமுகவைத் தோற்றுவித்தவரும் மறைந்த முதல்வருமான அண்ணாவின் பெயர் சூட்டப்படும்,” என்று திரு இளங்கோவன் கூறியுள்ளார்.

ஏழைகளுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் மானிய விலையில் உணவு வழங்கும் விதமாக மாநிலம் முழுவதும் 500 ‘கலைஞர்’ உணவகங்கள் திறக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, நேற்று முன்தினம் சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை திமுகவினர் சிலர் அடித்து நொறுக்கி, பெயர் பலகையைக் கிழித்தது சர்ச்சையைக் கிளப்பியது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!