‘இந்தியாவில் கொரோனா மரணங்கள் இரட்டிப்பாகலாம்’: இந்திய அறிவியல் கழகம் எச்சரிக்கை

இந்தியாவில் வரும் வாரங்களில் கொவிட்-19 தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை இரு மடங்காகலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போதைய நிலை நீடித்தால் வரும் ஜூன் 11ஆம் தேதிவாக்கில் கிருமித்தொற்றால் இந்தியாவில் மொத்தம் 404,000 மரணங்கள் நிகழலாம் என்று பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழக ஆய்வாளர்கள் குழு கணித்துள்ளது. ஜூலை இறுதிவாக்கில் மரண எண்ணிக்கை 1,018,879ஆக உயரலாம் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவியல், மதிப்பீட்டு நிலையம் முன்னுரைத்துள்ளது.

இவ்வேளையில், கடந்த வாரம் உலகில் பதிவான கொரோனா பாதிப்புகளில் 46% இந்தியாவில் பதிவாகின என்றும் அதனால் இறந்தவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 382,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது; புதிய உச்சமாக 3,780 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நிலைமை மோசமாகி வருகிறது. அங்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்வோரில் தொற்று உறுதிசெய்யப்படுவோர் விகிதம் 55 விழுக்காடாக அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் அங்கு 20,870 பேரை கொரோனா தொற்றிவிட்டது. இதை அடுத்து, மே 12ஆம் தேதிக்குப் பிறகு மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா என கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.

இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற இருந்ததாகவும் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் கூறின.

இத்தகைய நெருக்கடியான சூழலில் நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ரூ.50,000 கோடிக்கு (S$8.95 பில்லியன்) சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி தயாரிப்பாளர்கள், மருத்துவமனைகள், மற்ற சுகாதார நிறுவனங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை குறைந்த வட்டியில் கடன் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உயிர்களைக் காப்பதும் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதுமே இப்போதைய நோக்கம் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!