கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இளையர்கள் அதிகரிப்பு

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட இளை­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

"கொரோனா கிருமித்தொற்று காரணமாக தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்று வரும் இளை­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

"வழக்­க­மாக அளிக்­கப்­படும் சிகிச்சை பலன் தரு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. இந்த இளை­யர்­கள் உரு­மா­றிய கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டைந்­துள்­ளார்­களா என்­பதை கண்­டு­பி­டிக்க சோதனை நடத்­தப்­படும்," என்­றார் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா.

மலேசியாவில் சமூக

அள­வி­லான பாதிப்பு அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்ற கவலை எழுந்­துள்­ள­தாகவும் மலே­சிய சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

பாதிப்­ப­டைந்த குழு­மங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­துள்­ள­

போ­தி­லும் மலே­சி­யர்­க­ளி­டையே தனி­ந­பர் கொரோனா பாதிப்பு

அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் நேற்­றைய

நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் மேலும் 4,519 பேருக்கு கொவிட்-19

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதன்­மூ­லம் மலே­சி­யா­வில் மொத்த பாதிப்பு எண்­ணிக்கை 436,944ஆக அதி­க­ரித்­துள்­ளது.

நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 25 பேர் மாண்­டு­விட்­ட­தாக மலே­சிய சுகா­தா­ரத் துறை தெரி­வித்­தது.

மாண்­ட­வர்­களில் 24 பேர் மலே­சி­யர்­கள் என்­றும் ஒரு­வர் வெளி­நாட்­ட­வர் என்­றும் தெரி­விக்கப் பட்டது.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மலே­சி­யா­வில் இது­வரை 1,657 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

நேற்­றைய நில­வ­ரப்­படி கொரோ­னா­வி­லி­ருந்து 2,719 பேர் குண­ம் அடைந்து வசிப்­பி­டம் திரும்­பி­னர். மலே­சி­யா­வில் இது­வரை மொத்­தம் 398,723 பேர் கொரோ­னா­வி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நாடு தழு­விய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வைப் பிறப்­பிக்க மலே­சிய அர­சாங்­கம் திட்­ட­மி­ட­வில்லை என்று மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்று தெரி­வித்­தார். அதற்­குப் பதி­லாக குறிப்­பிட்ட சில கட்­டுப்­பா­டு­கள் மட்­டுமே நடை­முறைப்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

"குறிப்­பிட்ட ஓர் இடத்­தில் கிரு­மிப் பர­வல் அதி­கம் இருந்­தால் அவ்­வி­டத்­தில் நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும். அது கிரா­மம் அல்­லது மாவட்­ட­

மா­கக்­கூட இருக்­க­லாம்.

"ஆனால் பாதிக்­கப்­பட்ட இடங்­களில் மட்­டும் நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும்.

"நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டங்­க­ளுக்­குப் பிறகு மேலும் 5,000க்கும் மேற்­பட்­டோர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்றும் அர­சாங்­கம்

தலை­யி­ட­வில்லை என்­றால் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 10,000ஆக அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்றும் அஞ்சப்படுகிறது," என்­றார் திரு இஸ்­மா­யில்.

மலே­சி­யா­வில் கொவிட்-19 கிருமி அதி­கம் பர­வக்­கூ­டிய இடங்­

க­ளாக குறிப்­பிட்ட சில கடைத்­தொ­கு­தி­கள், பேரங்­கா­டி­கள்,

மளி­கைக்­க­டை­கள் ஆகி­யவை அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

150 இடங்­க­ளைக் கொண்ட

பட்­டி­யலை மலே­சிய அர­சாங்­கம் நேற்று வெளி­யிட்­டது.

பட்­டி­ய­லில் இடம்­பெ­றும் இடங்­கள் ஒரு வாரத்­துக்­குக் கண்­கா­ணிக்­கப்­பட்­டன.

அவற்­றில் 80 விழுக்­காடு இடங்­கள் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரி­லும் சிலாங்­கூர் மாநி­லத்­தி­லும் உள்­ளன.

பிர­பல கடைத்­தொ­கு­தி­க­ளான பங்­சார் கடைத்­தொ­குதி, சூரியா கெஎல்­சிசி, மிட் வேலி கடைத்­தொ­குதி, சோகோ காம்­பளெக்ஸ், சிலா­யாங் கடைத்­தொ­குதி அவற்­றில் அடங்­கும் என்று மலாய் மெயில் நாளி­தழ் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!