உடலுறுதி நிலையங்களுக்கு $18 மில்லியன் நிதியுதவி

அண்மைய கொவிட்-19 நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையங்களுக்கு உதவ ‘ஸ்போர்ட் எஸ்ஜி’ அமைப்பு $18 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

இதை தகுதிபெறும் வர்த்தகங்களுக்கும் சுய தொழில் புரிவோருக்கும் அந்த அமைப்பு தனது மீள்திறன் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளது.

கொவிட்-19 கொள்ளைநோயை முறியடிக்க கடந்த வாரம் கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, யோகாசனம் போன்ற குறைந்த அழுத்தம் உள்ள உடலுறுதி பயிற்சிகளே இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதிவரை உடலுறுதி நிலையங்களில் அனுமதிக்கப்படும்.

இதனால், மேற்கூறிய கால

கட்டத்தில் பாதிக்கப்படும் உடற் பயிற்சி நிலையங்களின் வாடகை போன்ற நடப்பு செலவுகளுக்கு ஈடுகட்ட உதவும் விதமாக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமது ஃபேஸ்புக் பதிவில் கருத்துக்கூறிய கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், “கொள்ளைநோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உதவியுள்ளன. அந்த நடவடிக்கைகள் தேவையானவையே.

“ஆனால், அவை விளையாட்டு, உடலுறுதித் திட்டங்கள் வழங்குவோரையும் வெகுவாக பாதித்

துள்ளன.

“நிரந்தர செலவுகள், மற்ற செலவுகள் போன்றவை இன்னமும் இந்தத் தொழில் புரிவோருக்கும் இந்தத் துறையில் நிபுணர்களாக விளங்குவோருக்கும் பிரச்சினையாக உள்ளன.

“இதில் ஈடுபட்டிருக்கும் விளையாட்டு நடத்துனர்களும் நிபுணர்களும், பொதுவாக சிங்கப்பூரர்களும், எங்களின் மதிப்பிற்குரிய பங்காளிகள் என உறுதி கூறுகிறேன். விளையாட்டுகள், உடலுறுதி, இவற்றில் தரநிலைகளை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து உதவி புரிவோம்.

அத்துடன், விளையாட்டுகள், உடலுறுதி போன்றவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வைத்திருப்போம்.”

இதன் தொடர்பில் குறிப்பாக 500 உடலுறுதி நிலையங்கள், உடற்

பயிற்சி நிலையங்களுக்கு உதவும் வகையில் கூடுதலாக $7.7 மில்லியன் உதவித் தொகையை விளையாட்டு, உடலுறுதி நடவடிக்கை நிதியுதவித் திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் உதவி பெறத் தகுதியுடையோர், ஒரு முறை வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவர். இந்த நிதியுதவி $5,000 முதல் $10,000 வரை பெறுமானமுள்ளவை.

இதைக் ெகாண்டு உடலுறுதி நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்களை நடத்துவோர் அவை மூடப்பட்டிருக்கும் மூன்று வார காலத்திற்கு தங்கள் வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளைச் சமாளிக்கலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!