தடுப்பூசி மருந்தால் பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியாது

புது­டெல்லி: ஃபைசர், மொடர்னா ஆகிய இரண்டு வெளி­நாட்டுத் தடுப்­பூ­சி­கள் இந்­தி­யா­வில் விரை­வில் இறக்­கு­மதி செய்­யப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த மருந்­து­க­ளுக்கு மத்­திய அரசு இழப்­பீட்டு காப்­பீடு வழங்­கக்­கூ­டும் என்று தெரி­கிறது.

தடுப்­பூ­சி­யால் பக்க விளை­வு­கள் ஏற்­பட்­டால் ஊசி போட்டுக்கொண்டவர்கள் அந்த நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து இழப்­பீடு கோர முடி­யாத பாது­காப்பை மத்­திய அரசு வழங்க முடிவு செய்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் கோவி­ஷீல்டு தடுப்­பூசி மருந்து தயா­ரிக்­கும் சீரம் இன்ஸ்­டி­டி­யூட் ஆப் இந்­தி­யா­வும் இழப்பீட்டுக் காப்பீடு தொடர்பில் சட்­ட­ரீ­தி­யான பாது­காப்­பைக் கோரி­ய­தாக செய்தி நிறு­வ­னம் ஏஎன்ஐ தெரி­வித்­துள்­ளது. இழப்­பீடு கோரு­வ­தில் இருந்து வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கப்­பட்­டால், இந்­திய நிறு­வ­ன­மான சீரம் மட்­டு­மல்ல, அனைத்துத் தடுப்­பூசி நிறு­வ­னங்­களும் அதே பாது­காப்­பைப் பெற வேண்­டும் என்­றும் சீரம் நிறு­வ­னம் கூறி­யதை மேற்­கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் எந்த தடுப்­பூ­சிக்­கும் மத்­திய அரசு இது­வரை சட்­ட­ரீ­தி­யான பாது­காப்பை வழங்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!