25 மி. தடுப்பூசி: உலகிற்கு அமெரிக்கா பகிர்ந்தளிப்பு

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் எஞ்சியுள்ள 25 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய கொவிட்-19 தடுப்­பூசி மருந்தை உலக நாடுக­ளுக்­குப் பகிர்ந்து அளிக்­கும் திட்­டத்தை வெள்ளை மாளிகை வெளி­யிட்­டுள்­ளது.

மேலும் இதனை மற்ற நாடு­கள் எளி­தில் பெறும் வகை­யில் மருந்து விநி­யோ­கம் தொடர்­பான சில கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தப்­போ­வ­தா­க­வும் வெள்ளை மாளிகை கூறி உள்­ளது.

இது குறித்து விளக்­கிய அதி­பர் ஜோ பைடன், எந்­த­வோர் அர­சி­யல் சலு­கை­யை­யும் எதிர்­பா­ரா­மல் தடுப்­பூ­சியை உலக நாடு­க­ளுக்கு அமெ­ரிக்கா வழங்­கும் என்­றார்.

மேலும் 80 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சியை இம்­மா­தத்­தில் நாடு­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிக்க அவர் உறு­தி­பூண்­டுள்­ளார்.

கோவேக்ஸ் என்­னும் அனைத்­து­லக தடுப்­பூ­சிப் பகிர்­வுத் திட்­டத்­தின் மூலம் கிட்­டத்­தட்ட 19 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சியை அமெ­ரிக்கா தான­மாக வழங்­கும் என்று அவர் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டார்.

இதில் 6 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய ஊசி மருந்து லத்­தின் அமெ­ரிக்கா, கரீபி­யத் தீவு­கள் போன்­ற­வற்­றுக்­கும் 7 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய ஊசி மருந்தை தெற்­கா­சிய மற்­றும் தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளுக்­கும் வழங்க இருப்­ப­தாக திரு பைடன் கூறி­னார்.

ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்கு 5 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய தடுப்­பூசி வழங்­கப்­படும் என்­றும் எஞ்­சிய 6 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய தடுப்­பூசி கனடா, மெக்­சிகோ, இந்­தியா, தென்­கொ­ரியா உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு நேர­டி­யாக விநி­யோ­கிக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"உயிர்­க­ளைப் பாது­காக்­க­வும் கொள்­ளை­நோய்க்கு முடி­வு­கட்­ட­வும் தடுப்­பூ­சி­களை பகிர்ந்து அளிக்­கி­றோம். அமெ­ரிக்­கா­வின் நற்­பண்­பின் அடிப்­ப­டை­யில் இப்­பணி மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது," என்­றார் திரு பைடன்.

இதற்­கி­டையே, எந்த நாட்­டுக்கு எந்த அள­வுக்கு தடுப்­பூசி பகிர்ந்து அளிக்­கப்­படும் என்ற விவ­ரத்தை வெள்ளை மாளிகை இறுதி செய்­யும் என்று அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சல்­லி­வன் தெரி­வித்­துள்­ளார்.

உலக நாடு­க­ளுக்­குத் தர அமெ­ரிக்கா முன்­வந்­தா­லும் கனடா, மெக்­சிகோ போன்ற அண்டை நாடு­

க­ளுக்­கும் மத்­திய, தென் அமெ­ரிக்க நாடு­க­ளுக்­கும் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­றார் அவர்.

எஞ்­சி­யுள்ள கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைப் பகிர்ந்து அளிக்­கு­மாறு அதி­பர் பைடனை உலக நாடு­கள் நெருக்கி வந்­தன.

கடந்த ஆண்­டில் அரை மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட அமெ­ரிக்க மக்­கள் கொள்ளை­ நோய்க்­குப் பலி­யா­ன­தைத் தொடர்ந்து சொந்த நாட்­டில் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை வெள்ளை மாளிகை தீவி­ரப்­ப­டுத்­தி­யது. அதனைத் தொடர்ந்து குறைந்­த­பட்­சம் 20 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய ஃபைசர் பயோ­என்­டெக், மொடர்னா, ஜான்­சன் அண்ட் ஜான்­சன் தடுப்­பூ­சி­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்ப திரு பைடன் உறுதி அளித்­தார்.

இவை தவிர 60 மில்­லி­யன் முறை போடக்­கூடிய ஆஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூசி விநி­யோ­கிக்­கும் திட்­டத்­தை­யும் அவர் வகுத்­தி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!