பாதிப்பு 68% குறைந்தது நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 120,529 பேர் பாதிப்பு; 3,380 பேர் உயிரிழப்பு

புது­டெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் காரணமாக பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்­க­ளா­கவே தொடர்ந்து குறைந்து வருகிறது.

"நாட்டில் அன்றாடத் ­தொற்று பாதிப்பு 68% குறைந்­துள்­ளது. அதே வேளையில், மீட்பு விகி­தமும் 93.1% ஆக உயர்ந்­துள்­ளது," என்று மத்­திய சுகா­தா­ரத்­துறை இணைச் செயலா­ளர் லாவ் அகர்­வால் தெரி­வித்­துள்ளார்.

"கடந்த மே 7ஆம் தேதி நாட்­டில் கிருமி பாதிப்பு எண்­ணிக்கை உச்­சத்தை எட்­டி­யது. அதன்­பி­றகு இப்பாதிப்பு ஏறத்தாழ 68% குறைந்­துள்­ளது. அதேபோல், மற்றொரு புறம் தொற்று பாதிப்­பில் இருந்து குண­ம­டை­வோ­ரின் எண்­ணிக்கை யும் அதி­க­ரித்து வரு­கிறது.

"60 வய­துக்கு மேற்­பட்ட முதி­ய­வா்­களில் 43% பேருக்­கும் 45 வய­துக்கு மேற்­பட்­ட­வா்­களில் 37% பேருக்­கும் இது­வரை தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ளது.

"இது­வரை இந்­தியா முழு­வ­தும் 22,78,60,317 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இதுவும் கிருமி பாதிப்பு குறைவதற்கு முக்கிய காரணமாகும்," என்று லாவ் அகர்­வால் மேலும் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யா­வில் கடந்த 58 நாட்­க­ளுக்­குப் பிறகு கொவிட்-19 ­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 120,529 ஆக பதி­வானது.

கடந்த ஏப்­ரல் 7ஆம் தேதிக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக தொற்று எண்­ணிக்கை இந்த அள­வுக்­குக் குறைந்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

எனி­னும், கடந்த 24 மணி நேரத்­தில் மாண்­டோர் எண்­ணிக்கை 3,380 ஆகப் பதி­வாகி உள்­ளது.

கடந்த மே மாதம் 9ஆம் தேதி­யன்று நாடு முழு­வ­தும் கிருமியால் 400,000க்கும் அதி­க­மானோர் பாதிக்கப்பட்டனர். அத்துடன், நாள்­தோ­றும் 4,000க்கும் அதி­க­மா­னோர் பலி­யாகி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், தற்­போது இந்­தப் பாதிப்பு குறையத் தொடங்­கி­யி­ருப்­பது மக்­களைச் சற்று ஆறு­தல் அடை­யச்­ செய்­துள்­ளது.

எனி­னும், இந்த இரண்­டா­வது அலை, இந்­தி­யாவை கடு­மை­யான மருத்­துவ, பொரு­ளா­தார நெருக் கடிக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­தாகவும் கூறப்­ப­டு­கிறது.

மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­கம் நேற்று காலை வெளி­யிட்ட தக­வ­லின்­படி, "இந்­தியாவில் கடந்த 24 மணி நேரத்­தில் 120,529 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 3,380 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­ நிலையில், மொத்த பலி எண்­ணிக்கை 344,082 ஆக உயர்ந்­துள்­ளது. அதேசம­யம் குண­ம­டைந்­த­வர்­களின் மொத்த எண்­ணிக்கை 2,67,95,549 ஆக உயர்ந்­துள்­ளது. 15.5 லட்­சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"கடந்த 24 மணி நேரத்­தில் கிருமி பாதிப்­பில் இருந்து 1.97 லட்­சம் பேர் குண­ம­டைந்து வீடு திரும் பி­னர்," என தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!