ஊரகப் பகுதிகளில் அதிக பாதிப்பு

மோசமான சுகாதாரக் கட்டமைப்பு நிலையை வெட்டவெளிச்சமாக்கிய கொவிட்-19 பரவல்

புது­டெல்லி: இந்­திய கிரா­மப்­பு­றங்­களில் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு மோச­மான நிலையில் இருப்­பதை கொவிட்-19 பர­வல் அம்­ப­ல­மாக்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த மே மாதத்­தில் பதி­வான கொரோனா பாதிப்­பில் 53 விழுக்­கா­டும் அத­னால் ஏற்­பட்ட உயி­ர் இ­ழப்­பில் 52 விழுக்­கா­டும் ஊரக மாவட்­டங்­களில் நிகழ்ந்­த­தாக 'அறி­வி­யல், சுற்­றுச்­சூ­ழல் மையம் (சிஎஸ்இ)' எனும் லாப நோக்­க­மற்ற பொது­நல ஆய்வு நிறு­வ­னம் வெளி­யிட்ட புதிய தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

"கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்­வ­தில் நகர்ப்­பு­றங்­க­ளின் மோச­மான ஆயத்­த­நிலை அப்­பட்­ட­மா­கத் தெரிந்­தது. ஆனால், கிரா­மப் பகு­தி­களில்­தான் மிக­வும் துய­ர­மான சூழல் நில­வு­கிறது," என்று டெல்­லி­யைத் தள­மா­கக் கொண்ட அந்­நி­று­வ­னத்­தின் ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்­டு உள்­ளது.

ஊர­கப் பகு­தி­களில் காணப்­படும் சமூக சுகா­தார மையங்­களில் 76% மருத்­து­வர்­களும் 56% கதிர்­வீச்­சுப்­பட பதி­வா­ளர்­களும் 35% ஆய்­வ­கத் தொழில்­நுட்­பர்­களும் அதி­கம் தேவைப்­ப­டு­வ­தாக 'இந்­திய சுற்­றுச்­சூ­ழல் நிலைமை புள்ளி­வி­வ­ரங்­கள் 2021' எனும் அந்த நிறு­வனத்­தின் ஆய்­வ­றிக்கை கூறு­கிறது.

"உல­க­ள­வில் கொரோனா இரண்­டா­வது அலை­யால் இந்­தியா மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அதி­லும், நகர்ப்­புற இந்­தி­யா­வைக் காட்­டி­லும் ஊர­கப் பகு­தி­களே மிக மோச­மான பாதிப்பை எதிர்­கொண்டு வரு­கின்­ற­ன," என்­றார் மாதம் இரு­முறை வெளி­யா­கும் 'டௌன் டு எர்த்' எனும் சஞ்­சி­கை­யின் நிர்­வாக இயக்­கு­நர் ரிச்­சர்ட் மொக­பத்ரா.

இந்­நி­லை­யில், கொவிட்-19 பாதிப்பு, மரண எண்­ணிக்கை குறித்துப் பதி­வு­செய்­யும் நடை­முறை­யைச் சீர­மைக்­கும் பணி­கள் இடம்­பெற்று வரு­கிறது என்று அர­சாங்க வட்­டா­ரங்­க­ள் கூறியதாக 'இந்­தியா டுடே' ஊட­கம் செய்தி வெளி­யிட்டு இருக்கிறது.

கொரோனா தொற்று, பொரு­ளி­ய­லில் ஏற்­ப­டுத்தி வரும் மோச­மான தாக்­கம் தொட­ரும் எனக் கணித்­துள்­ளார் ஆய்­வா­ளர்­களில் ஒரு­வ­ரான செங்­குப்தா.

ஜம்மு-காஷ்­மீர், பீகார், மேற்கு வங்­கம், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட பல மாநி­லங்­க­ளி­லும் ஒன்­றி­யப் பகு­தி­க­ளி­லும் 'நூறு நாள் வேலைத் திட்­டத்­தின்'கீழ் வேலை செய்­தோர்க்­குத் தாம­த­மாக ஊதி­யம் தரப்­ப­டு­வ­தா­கக் கூறப்படுகிறது.

இந்­தி­யா­வின் ஊர­கப் பகு­தி­களில் ஓராண்­டில் ஆயி­ரம் பேர்க்கு எழு­வர் என்ற விகி­தத்­தில், அதா­வது ஆயி­ரம் பேரைக் கொண்ட ஒரு கிரா­மத்­தில் இரு மாதங்­களுக்கு ஒரு­வர் என இறப்பு நிகழ்­வதாக பொதுக் கொள்கை நிபு­ணர் டாக்­டர் சந்­தி­ர­காந்த் லக­ரியா தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், "கடந்த ஏப்­ரல் -மே மாதங்­களில் கிரா­மப் பகு­தி­களில் இறப்பு விகி­தம் அதி­க­மாக இருந்­தது. மூன்று அல்­லது நான்கு மர­ணங்­கள் நிகழ்ந்த கிரா­மங்­களை நாங்­கள் அறிந்­துள்­ளோம். இது, அதி­கா­ர­பூர்வ எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் கொவிட்-19 தொற்­றால் அதி­க­மான மர­ணங்­கள் நிகழ்ந்து இ­ருக்­க­லாம் என்­ப­தற்­கான அறி­குறி," என்­றார் டாக்­டர் லக­ரியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!