‘ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை தேவை’

புதுடெல்லி: உலகில் கொவிட்-19 தொற்றைத் துடைத்து ஒழித்து சுகாதார நிர்வாக முறையை மேம்படுத்த ஒரே பூமி ஒரே சுகாதார அணுகுமுறை தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுத்துள்ளார்.

வருங்காலத்தில் இதுபோன்ற தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உலகளாவிய ஒற்றுமை இருக்க வேண்டும் என்றும் இதில் வெளிப்படையான ஜனநாயக சமூகங்களுக்குச் சிறப்புப் பொறுப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பிரிட்டனின் கார்ன்வால் நகரில் ஜி7 கூட்டம் நடத்தினர், அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப் பட்டு பங்கேற்றார்.

மெய்நிகர் ரீதியில் சனிக்கிழமை உரையாற்றிய திரு மோடி, சுகாதார நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக இடம்பெறும் உலகக் கூட்டு முயற்சிகளில் இந்தியா தன்னை இணைத்துக்கொண்டு ஆதரவு அளிக்கும் என்று உறுதி அளித்தார்.

கொரோனா இரண்டாவது அலையின்போது இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடுகளுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் திரு மோடி தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான காப்புரிமையைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் பரிந்துரைத்துள்ளன.

தொற்று பரவலைத் தடுத்து சிகிச்சையளிக்க தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்கு வா்த்தகம் சாா்ந்த அறிவுசாா் சொத்துரிமை ஒப்பந்தத்தில் (டிரிப்ஸ்) இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டுள்ளன.

இந்தப் பரிந்துரைகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

ஜி7 தலைவர்கள், கொவிட்-19 கிருமித்தொற்றை ஒழித்து உலகை மீண்டும் சிறப்பாக உருவாக்குவது என்ற கருப்பொருளுடன் பலவற்றையும் விவாதித்தனர். எதிர்காலத்தில் தொற்றுநோய்களுக்கு எதிரான பாதிப்பை எதிர்கொள்வது உள்ளிட்ட பலவும் விவாதிப்புகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!