ஆட்டுக்கறி பரிமாறவில்லை; நின்றுபோன திருமணம்

புவனேஸ்வர்: ஆட்டுக்கறி பரிமாறவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மணமகன், திருமணத்தை தடுத்து நிறுத்தினார். இச்சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

அங்குள்ள ஜஜ்பூரை சேர்ந்தவர் ராமகாந்த் பத்ரா. 21 வயதான இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமண விருந்துக்காக மணமகளின் கிராமத்துக்கு தனது உறவினர்களுடன் சென்றிருந்தார் ராமகாந்த். அப்போது உணவுப் பரிமாறும் கூடத்தில் கறிக்குழம்பு இல்லை என்பதை அறிந்த அவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

ஏன் கறிக்குழம்பு பரிமாறவில்லை என்று மணமகளின் குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். மணமகளின் குடும்பத்தார் கெஞ்சிப் பார்த்தும் சமாதானமடையாத ராமகாந்த், திருமணத்தை நிறுத்துவதாக கூறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.மேலும் மறுநாளே வேறொரு பெண்ணை அவர் திருமணம் செய்தது தெரிய வந்தது.

அண்மையில் உத்தரப்பிர தேச மாநிலத்தில் மண மகனால் நாளேடுகளை முகக் கண்ணாடி உதவியின்றி படிக்க முடியவில்லை என்ற காரணத்தை முன்வைத்து மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவமும் அரங்கேறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!