ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்: ‘துர்கா-2’ மூலம் பதிலடி தரப்போகும் இந்தியா

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அண்மையில் நிகழ்ந்த ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை முறியடிக்க ‘துர்கா-2’ என்ற ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இனி பயங்கரவாத அமைப்புகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்புப் படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்மைய தாக்குதல் பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன்தான் நடத்தப்பட்டுள்ளது என்றும் ராணுவ உயர் அதிகாரி கூறியதாக தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவுக்குள் ஆயுதங்களைக் கடத்த பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர். இத்தகைய முயற்சிகளை இந்திய ராணுவம் அவ்வப்போது முறியடித்து வருகிறது.

இந்நிலையில் முதன்முறையாக ஆளில்லா விமானங்களில் வெடிகுண்டுகளை நிரப்பி இந்தியாவில் உள்ள இலக்குகளைப் பயங்கரவாதிகள் தாக்கி உள்ளனர். இதையடுத்து இத்தகைய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதற்கான அமைப்பை இந்தியா நிறுவ உள்ளது.

ஜம்மு விமானப்படை நிலையத்தில் மிகப்பெரிய ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு அமைக்கப்படும் என்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இதற்காக ‘துர்கா-2’ என்ற ‘ட்ரோன்’ எதிர்ப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் இனி பயன்படுத்தப்பட உள்ள ரேடார்கள் மூலம் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட தூரத்தில் பறக்கும் மிகச்சிறிய ஆளில்லா விமானங்களைக்கூட கண்டறிய முடியும் எனவும் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!