எட்டு ஐரோப்பிய நாடுகளின் தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டு

அடார் பூனவாலா: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலைப் பெறுவதில் சர்ச்சை ஏதுமில்லை

புது­டெல்லி: கொரோ­னா­வுக்கு எதி­ரான கோவி­ஷீல்டு தடுப்­பூ­சியை ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தைச் சேர்ந்த 8 நாடு­கள் அங்­கீ­க­ரித்­துள்­ளன. அந்­நா­டு­க­ளின் தடுப்­பூ­சிப் பட்­டி­ய­லில் கோவி­ஷீல்­டும் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில் அடுத்த ஒரு மாதத்­துக்­குள் கோவி­ஷீல்டு தடுப்­பூசி பயன்­பாட்­டுக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யம் அனு­மதி வழங்­கும் என எதிர்­பார்ப்­ப­தாக அதன் உற்­பத்­தி­யா­ள­ரான இந்­திய சீரம் மையம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

உல­கின் ஆகப் பெரிய தடுப்­பூசி உற்­பத்­தி­யா­ள­ரான இந்­நி­று­வ­னத்­தின் தலை­மைச் செயல் அதி­காரி அடார் பூன­வாலா, ஐரோப்­பிய மருந்து­கள் ஒழுங்­காற்று முக­மை­யா­னது கோவி­ஷீல்­டுக்கு நிச்­ச­யம் அனு­மதி வழங்­கும் என உறு­தி­யாக நம்­பு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தத் தடுப்­பூ­சிக்கு உலக சுகா­தார நிறு­வ­னம், பிரிட்­டன் மருந்து கட்­டுப்­பாட்டு முகமை ஆகி­யவை ஏற்­கெ­னவே ஒப்­பு­தல் அளித்­துள்­ளன.

இந்­நி­லை­யில், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளுக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தால் வழங்­கப்­படும் மின்­னி­லக்க கொவிட் சான்­றி­தழை ஏற்­கத் தயார் என்று அறி­வித்­தது மத்­திய அரசு. அதே­போல் ஐரோப்­பிய ஒன்­றி­ய­மும் இந்­தி­யா­வில் பயன்­ப­டுத்­தப்­படும் கோவி­ஷீல்டு, கோவாக்­சின் தடுப்­பூ­சி­க­ளுக்­காக வழங்­கப்­படும் கொவிட் சான்­றி­தழை ஏற்­க­வேண்­டும் என பதி­லுக்கு வலி­யு­றுத்­தி­யது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் ஜூலை 1ஆம் தேதி முதல் பய­ணம் மேற்­கொள்­ப­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்­கான 'கிரீன் பாஸ்' என ஆங்­கி­லத்­தில் குறிப்­பி­டப்­படும் சான்­றி­தழை வைத்­தி­ருப்­பது அவ­சி­ய­மா­கிறது.

இந்­நி­லை­யில், இந்­திய தடுப்­பூ­சிக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் ஒப்­பு­த­லைப் பெறு­வ­தில் எந்­த­வித சர்ச்­சை­யும் இல்லை என்று இந்­திய சீரம் மையத்­தின் தலைமைச் செயல் அதி­காரி அடார் பூன­வாலா கூறி­யுள்­ளார்.

சில நடை­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்டி உள்­ள­தா­க­வும் எந்த நேரத்­தி­லும் இந்­தி­யத் தடுப்­பூ­சி­க­ளுக்கு ஒப்­பு­தல் கிடைக்­கக்­கூ­டும் என்­றும் அவர் தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த எட்டு நாடுகள் கோவிஷீல்டை ஒப்புதல் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்த்துள்ளன.

ஜெர்மனி, ஸ்லோவேனியா, ஆஸ்திரியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கிரீஸ் ஆகிய நாடுகள் இதனை அறிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!